முதல் பந்தே சுத்துனாலும்.. பும்ராவுக்கு பதில் அவர் வந்தாலும்.. நாங்க மாறாமட்டோம்.. ஓலி போப் பேட்டி

Ollie Pope
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று எச்சரித்ததை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மறுபுறம் மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தது. எனவே அதிரடியாக விளையாடும் பஸ்பால் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி வெற்றி காணுமாறு இங்கிலாந்து அணியை மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் கேப்டன்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

நாங்க மாறாமட்டோம்:
இந்நிலையில் ராஞ்சியில் நடைபெற உள்ள 4வது போட்டிக்கான பிட்ச்சில் முதல் பந்தே சுழலும் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்தின் துணை கேப்டன் ஓலி போப் கூறியுள்ளார். எனவே அதில் ஓய்வெடுக்கும் பும்ராவுக்கு பதிலாக எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் அக்சர் படேலை இந்தியா கொண்டு வந்தாலும் நாங்கள் பஸ்பால் ஆட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று ஓலி போப் கூறியுள்ளார். இது பற்றி நான்காவது போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

“அது முதல் பந்திலிருந்தே சுழன்றாலும் பிட்ச்சை கணக்கிலிருந்து வெளியே எடுத்து விடலாம். பொதுவாக இந்தியாவில் பெரும்பாலான பிட்ச்கள் ஃபிளாட்டாக துவங்கி பின்னர் மோசமடையும். அது போன்ற மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்வது சாதகத்தை கொடுக்கும். அடுத்த போட்டியில் பும்ரா விளையாடாதது இந்தியாவுக்கு பின்னடைவாகும். ஆனால் அது நாங்கள் விளையாடும் வழியை மாற்றப் போவதில்லை”

- Advertisement -

“கடந்த போட்டியில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். எனவே நாங்களும் எப்படி விளையாட வேண்டும் என்பதில் மாற்றம் செய்யப் போவதில்லை. கடந்த போட்டியில் கடைசி 2 நாட்களில் நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தை கொடுத்தது. எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனதால் விரக்தியடைந்தோம். இருப்பினும் அதை நாங்கள் அங்கேயே விட்டு விட்டோம். தற்போது எங்களுடைய அணி புத்துணர்ச்சியுடன் இருக்கிறது”

இதையும் படிங்க: வெறும் 3 ரன்ஸ்.. கடைசி பந்தில் சிக்ஸர்.. இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சரித்திர வெற்றியை பெற்றது எப்படி?

“இந்தியாவில் வெற்றி என்பது எப்போதுமே நல்ல விளிம்பில் இருக்கும். ராஞ்சி பிட்ச் சுவாரசியமானதாக இருக்கிறது. அதில் இந்தியா அக்சர் படேலை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக அவர்கள் பிட்ச்சில் தண்ணீர் அடித்தனர். எனவே கண்டிப்பாக இந்திய அணியில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் விளையாடுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதில் அசத்துவதற்கு எங்களிடமும் சில தரமான இளம் ஸ்பின்னர்கள் இருக்கின்றனர்” எனக் கூறினார்.

Advertisement