டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவிக்கு 2 பேருக்கு இடையே – கடும் போட்டி

IND
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது மே 26-ஆம் தேதியுடன் முடிவடையும் வேளையில் அடுத்ததாக ஜூன் மாதம் 2-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதினால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

அதோடு இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்த வேளையில் மே-ஒன்றாம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இடம் பெற்றிருக்கும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தற்போது தங்களது டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யும் இன்று இரவோ அல்லது நாளையோ டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ள வேளையில் துணைக்கேப்டன் பதவிக்காக இரண்டு வீரர்கள் கடுமையான போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவரே துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரின் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரிங்கு சிங் செய்த செயல் – கடைசியில் பெயிலியரான சோகம்

மேலும் தனிப்பட்ட முறையிலும் பாண்டியாவின் செயல்பாடும் மோசமாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement