6, 6, 6.. ஜாம்பவான் ஆண்டர்சனை பொளந்த ஜெய்ஸ்வால்.. சித்துவின் 30 வருட சாதனையை தூளாக்கி உலக சாதனை

Jaiswal and Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. அதை தொடர்ந்து மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் தொடங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஆண்டர்சனுக்கு அடி:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக துவக்க வீரராக களமிறங்கி அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் இரட்டை சதமடித்து 214*, சுப்மன் கில் 91, சர்பராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து துரத்தி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் பின்னர் டி20 போல அதிரடியாக விளையாடி சதமடித்தார். நேரம் செல்ல செல்ல 150 ரன்கள் கடந்து வெளுத்து வாங்கிய அவர் இங்கிலாந்தின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 85வது ஓவரின் 2, 3, 4வது பந்துகளில் 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற நவ்ஜோத் சித்துவின் 30 வருட சாதனையை தூளாக்கி புதிய வரலாறு படைத்துள்ளார்: அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 12, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. நவ்ஜோத் சித்து : 8, இலங்கைக்கு எதிராக, 1994
3. மயங் அகர்வால் : 8, வங்கதேசத்துக்கு எதிராக, 2019

இதையும் படிங்க: 14 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. மீண்டும் நொறுக்கிய ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் இந்தியராக மெகா சாதனை

சொல்லப்போனால் ஒரு டெஸ்ட்டிங் இன்னிங்ஸில் 10 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் இப்போட்டியில் படைத்துள்ளார். அது போக உலக அளவில் மிகவும் இளம் வயதில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 22 வருடம் 52 நாட்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. பென் ஸ்டோக்ஸ் : 24 வருடம் 213 நாட்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2016

Advertisement