14 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. மீண்டும் நொறுக்கிய ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் இந்தியராக மெகா சாதனை

Jaiswal 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் நகரில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் முதலில் 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் அதிரடியான சதமடித்து 153 ரன்கள் குவித்ததால் 224/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் சொதப்பிய அந்த அணியை 319 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கி இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 19, ரஜத் படிதார் 0 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக பேட்டிங் செய்து சதமடித்தார். அப்போது தசை பிடிப்பால் பாதியிலேயே வெளியேறிய அவருடன் தன்னுடைய பங்கிற்கு மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில் சதத்தை நெருங்கிய போது 91 ரன்களில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

அதே போல எதிர்புறம் நைட்வாட்ச்மேனாக இங்கிலாந்துக்கு தொல்லை கொடுத்த குல்தீப் யாதவ் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த நிலைமையில் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் மீண்டும் இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதற்கு சர்பராஸ் கான் கொடுத்ததை பயன்படுத்திய அவர் தொடர்ந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 150 ரன்கள் கடந்தார்.

- Advertisement -

நேரம் செல்ல செல்ல தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது இரட்டை சதத்தை அடித்தார். குறிப்பாக கடந்த போட்டியில் 209 ரன்கள் அடித்த அவர் இதையும் சேர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதமடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளி (1992/93இல் இங்கிலாந்து, ஜிம்பாப்வேவுக்கு எதிராக) மற்றும் விராட் கோலி (2017/18இல் இலங்கைக்கு எதிராக) ஆகியோருக்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதை விட இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் ஜெயஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர், சச்சின், வினோத் காம்ப்ளி, குண்டப்பா விஸ்வநாத், ராகுல் டிராவிட், புஜாரா, மாக் பட்டோடி ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒரு இரட்டை சதம் மட்டுமே அடித்துள்ளனர்.

இதையும் படிங்க: 14 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. மீண்டும் நொறுக்கிய ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் இந்தியராக மெகா சாதனை

இறுதியில் ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி 12 சிக்ஸருடன் 214* ரன்களும் சர்பராஸ் கான் அரை சதமடித்து 68* ரன்களும் எடுத்த போது கேப்டன் ரோஹித் சர்மா தங்களுடைய 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அந்த வகையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 430/4 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு 557 என்ற மெகா ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement