80, 209, 214, 73, 57.. இங்கிலாந்தை சொல்லி அடித்த ஜெய்ஸ்வால்.. 75 வருடத்துக்கு பின் வேற லெவல் தனித்துவ சாதனை

Yashasvi Jaiswal 22
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலா நகரில் துவங்கியுள்ள 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த போட்டியில் ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் அதற்குத் தகுந்தார் போல் பேட்டிங் செய்யாத அந்த அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக அரை சதமடித்து 57 (58) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் 104 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா அரை சதமடித்து 52* ரன்கள், அடுத்ததாக வந்த சுப்மன் கில் 26* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அந்த வகையில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்தை விட 83 ரன்கள் மட்டுமே தங்கியுள்ள இந்தியா இப்போட்டியில் வலுவான அடித்தளத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 80 (76) ரன்கள் அடித்தும் இந்திய அணியால் வெற்றி காண முடியவில்லை.

அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்து இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த அவர் 209 ரன்கள் விளாசி இந்தியா கம்பேக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் பின் ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 12 சிக்சரை பறக்க விட்ட அவர் இரட்டை சதமடித்து 214* ரன்கள் விளாசி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

பின்னர் ராஞ்சியில் நடந்த 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸ் 73 ரன்கள் அடித்த அவர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார். அந்த வரிசையில் தற்போது 5 போட்டியில் 57 ரன்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இந்த தொடரில் இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் முறையே 80, 209, 214*, 73, 57 ரன்களை அடித்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: 16 இன்னிங்ஸில் 1000 ரன்ஸ்.. கவாஸ்கர், புஜாராவை மிஞ்சிய ஜெய்ஸ்வால்.. ப்ராட்மேனுக்கு அடுத்து 2 அபார சாதனை

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 75 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் 5 போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் இந்திய வீரர் என்ற தனித்துவமான வரலாற்றுச் சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1948/49ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் இந்திய வீரர் “ருசி மோடி” இதே போல 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement