16 இன்னிங்ஸில் 1000 ரன்ஸ்.. கவாஸ்கர், புஜாராவை மிஞ்சிய ஜெய்ஸ்வால்.. ப்ராட்மேனுக்கு அடுத்து 2 அபார சாதனை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 83 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு 104 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 57 (58) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களத்தில் கேப்டன் ரோகித் சர்மா 52*, அடுத்ததாக வந்த சுப்மன் கில் 26* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

12 இன்னிங்ஸில் 1000:
முன்னதாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து அசத்திய அவர் இந்த தொடரில் இதுவரை 2 இரட்டை சதங்கள் உட்பட 712 ரன்கள் குவித்துள்ளார்.

அப்படி ஆரம்பம் முதலே அசத்தி வரும் அவர் இதுவரை தனது கேரியரில் 9 டெஸ்ட் போட்டிகளில் 1028* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த போட்டிகளில் வேகமாக 1000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் மற்றும் புஜாரா ஆகியோர் தங்களது முதல் 12 போட்டிகளில் 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 75 வருடங்கள் கழித்து 2வது அதிவேகமான 1000 ரன்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜெயஸ்வால் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள் மற்றும் வருடங்கள்) :
1. சர் டான் ப்ராட்மேன் : 7 (1930)
2. ஹெர்பர்ட் ஃசுட்க்ளிப் : 9 (1925)
2. ஜார்ஜ் ஹெட்லி : 9 (1931)
2. எவர்டன் வீக்ஸ் : 9 (1949)
2. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 9 (2024)*

இதையும் படிங்க: ஒரு புள்ளி கூட மாறாமல் சத்தீஸ்வர் புஜாராவின் சாதனையை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

அத்துடன் 16 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 1,000 ரன்கள் அடித்த இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 17 இன்னிங்ஸில் துவக்க வீரராக 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் (27, இங்கிலாந்து) அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் (26, ஆஸ்திரேலியா) சாதனையையும் உடைத்து அவர் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது

Advertisement