ரோஹித்தின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரம்மாண்ட உலக சாதனை

Jaiswal Six
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்றுள்ளன. அந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி இந்த தொடரின் மூன்றாவது போட்டி துவங்கியது. ராஜ்கோட் நகரில் நடைபெறும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து வேகமாக விளையாடுகிறோம் என்ற பெயரில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது. அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பிரம்மாண்ட சாதனை:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214*, சுப்மன் கில் 91, சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மிகப் பெரிய இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் பின்னர் டி20க்கு போல அதிரடியாக விளையாடி சதமடித்தார். அப்போது தசைப்பிடிப்பு காயத்தால் 3வது நாள் மாலையில் பாதியிலேயே வெளியேறிய அவர் 4வது நாள் அதிலிருந்து குணமடைந்து வந்துமீண்டும் இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த அவர் மொத்தம் 14 பவுண்டரி 12 சிக்ஸர்களை பறக்க விட்டு 214* ரன்கள் குவித்தார். மேலும் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் அவர் 20* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 20, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. ரோகித் சர்மா : 19, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019
3. சிம்ரோன் ஹெட்மேயர் : 15, வங்கதேசத்துக்கு எதிராக, 2018
4. பென் ஸ்டோக்ஸ் : 15, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2023

இதையும் படிங்க: ப்ராட்மேனை முந்திய ஜெய்ஸ்வால்.. 92 வருட இந்திய கிரிக்கெட்டில் சச்சின் போன்ற யாருமே படைக்காத சரித்திர சாதனை

அத்துடன் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் நவ்ஜோத் சித்து மற்றும் மயங் அகர்வால் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement