IND vs WI : வெ.இ அணியை பிரித்து மேய்ந்து பாபர் – ரிஸ்வான் சாதனையை உடைத்த கில் – ஜெய்ஸ்வால் ஜோடி புதிய உலக சாதனை

Jaiswal Gill 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்தியா அடுத்த 2 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தொடரை சமன் செய்து அதிரடி கொடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் லாடர்ஹில் நகரில் நடைபெற்ற 4வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டியிலும் வென்று 3 – 2 (5) என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

முன்னதாக நடைபெற்ற 4வது போட்டியில் சிம்ரோன் ஹெட்மயர் 61 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஆரம்பம் முதலே அதிரடியாக எதிர்கொண்டு ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் 15.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 165 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 17 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

உலக சாதனை தகர்ப்பு:
அதில் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமாக தடுமாறி வந்த சுப்மன் கில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 77 (47) ரன்களும் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்த ஜெய்ஸ்வால் இம்முறை கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 84* (51) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் இப்போட்டியில் 165 ரன்கள் குவித்த அந்த ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற ரோகித் சர்மா – ஷிகர் தவான் சாதனையும் (தலா 165) சமன் செய்தனர்.

அதை விட 2 டி20 உலக கோப்பைகளை வென்று இப்போதும் டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஓப்பனிங் ஓப்பனிங் ஜோடி என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஆகியோரது சாதனையும் தகர்த்துள்ள இந்த ஜோடி புதிய உலக சாதனை படைத்த இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 208 ரன்களை பாகிஸ்தான் சேசிங் செய்யும் போது பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஆகியோர் 158 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அதை தற்போது உடைத்துள்ள ஜெய்ஸ்வால் – கில் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற பெருமையும் பெற்றுள்ளனர்.

இதற்கு முன் 2019இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ரோகித் சர்மா – கேஎல் ராகுல் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தையாக சாதனையாகும். அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் சேசிங் செய்யும் போது தலா 75க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர்கள் என்ற பெருமையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:IND vs WI : சச்சின் – கங்குலி மாதிரி வருங்காலத்தில் கில் – ஜெய்ஸ்வால் வருவாங்க, முன்னாள் இந்திய வீரர் உறுதியான நம்பிக்கை

இதற்கு முன் ரோகித் – தவான் போன்ற எந்த இந்திய ஜோடியும் ஒரு சேசிங் செய்த போட்டியில் தலா 75+ ரன்கள் அடிக்காத நிலையில் உலக அளவில் பாகிஸ்தானின் பாபர் அசாம் – முகமது உஸ்மான் ஆகியோர் 2 முறையும் (வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2021இல் – இங்கிலாந்துக்கு எதிராக, 2022இல்) இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் 1 முறையும் (இந்தியாவுக்கு எதிராக, 2022) சேசிங் செய்த போட்டியில் தலா 75க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர். அந்த வகையில் வருங்கால நட்சத்திரங்களாக இந்த 2 இளம் வீரர்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement