2023 உ.கோ ரோஹித் மாதிரி ஒரு பிளேயர் கிடைச்சுட்டாரு.. சரியா யூஸ் பண்ணுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay Manjrekar 7
- Advertisement -

சொந்த மண்ணில் கோலகலமாக நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக முடிந்தது. ஏனெனில் ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா தலைமையில் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று வந்த இந்தியாவை இறுதிப்போட்டியில் 240 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்று ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை பரிசளித்தது.

இதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ள இந்தியா அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணியை வைத்து வென்றது. அதன் பின் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ளது.

- Advertisement -

ரோஹித் மாதிரி:
இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா போல் செயல்படும் திறமையை இளம் வீரர் ஜெய்ஸ்வால் கொண்டிருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்து இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“தற்சமயத்தில் மற்றொரு டி20 அணியை இந்தியா களமிறக்கி ஒரு சர்வதேச அணியுடன் போட்டியிட முடியும். அது தான் ஐபிஎல் இந்தியாவுக்கு செய்து கொடுத்துள்ளது. ஒருவேளை இந்தியா தங்களுடைய அதிரடியாக விளையாடும் அணுகு முறையை மாற்றியமைக்க விரும்பினால் அதை செய்வதற்கு ஜெய்ஸ்வால் மிகவும் சரியானவர். அவரால் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இந்தியாவுக்கு என்ன செய்தாரோ அதை செய்து கொடுக்க முடியும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல 2020 அண்டர்-19 உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த ஜெய்ஸ்வால் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடி வந்த அவர் 2023 சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த (13 பந்துகளில் வீரராக சாதனை படைத்து 625 ரன்கள் விளாசி ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதையும் படிங்க: தெ.ஆ தொடரில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அவரை விளையாட வைப்பதே புத்திசாலித்தனம்.. ஜஹீர் கான் கருத்து

அதனால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிராக 124 ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார். அந்த வகையில் சேவாக், ரோகித் சர்மா போல இந்தியாவுக்கு வருங்காலங்களில் அவர் அதிரடி துவக்க வீரராக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement