தெ.ஆ தொடரில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அவரை விளையாட வைப்பதே புத்திசாலித்தனம்.. ஜஹீர் கான் கருத்து

Zaheer Khan 5
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி அதனுடைய சொந்த மண்ணில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இருப்பினும் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் டாஸ் கூட விசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அடுத்த போட்டி டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற உள்ளது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இத்தொடரில் நிறைய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 2 மூத்த ஸ்பின்னர்கள் தேர்வாகியுள்ளதால் இளம் வீரர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஜஹீர் கான் ஆலோசனை:
இந்நிலையில் குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரவி பிஷ்னோய் இத்தொடரிலும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கு வளைவுத் தன்மையை ஏற்படுத்தும்”

“ஒருவேளை நீங்கள் குல்தீப் யாதவை தேர்வு செய்தால் அவர் பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலும் வீச மாட்டார். எனவே ரவி பிஷ்னோயை தேர்ந்தெடுப்பது அங்கே சிறந்த சிந்தனை செயல் முறையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2020 அண்டர்-19 உலகக் கோப்பை ஃபைனல் வரை இந்தியா செல்வதற்கு முக்கிய பங்காற்றி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான ரவி பிஷ்னோய் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர் நாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார். மேலும் பவர் பிளே ஓவர்கள் முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து தருணங்களிலும் தைரியமாக பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: 2023 உ.கோ தோல்வியை ஈடுகட்ட வாய்ப்பு கிடைச்சுருக்கு.. மிஸ் பண்ணாதீங்க.. ரோஹித்துக்கு கவாஸ்கர் அட்வைஸ்

மறுபுறம் 2023 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் 2023 உலகக் கோப்பையிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். எனவே அவரும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த இருவரில் பிளேயிங் லெவனில் விளையாடப் போவது யார் என்பதை 2வது போட்டியில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement