- Advertisement -
ஐ.பி.எல்

தோனி பேட்டிங்கில் செய்வதை நான் பந்துவீச்சில் செய்ய விரும்புகிறேன் – லக்னோ வீரர் யாஷ் தாகூர் விருப்பம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதோடு நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி மூன்று வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்களையும், கே.எல் ராகுல் 33 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே குவித்ததால் 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாகூர் 3.5 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய யாஷ் தாகூர் கூறுகையில் : பந்துவீச்சில் என்னுடைய ரோல் மாடல் உமேஷ் யாதவ் தான். அவரும் நானும் ஒரே ஊர் தான். அவரைப் பார்த்துதான் நான் வேகப்பந்து வீச்சை கற்றுக் கொண்டேன். அவருக்கு எதிராக விளையாடும் போது நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

இதையும் படிங்க : தீபக் சஹர் விலகல்.. கொல்கத்தா போட்டியில் 3 மாற்றங்களை செய்த ருதுராஜ்.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ

இரவு 12 மணிக்கு அவரை அழைத்தால் கூட எனக்காக ஒரு உதவி செய்வார். கிரிக்கெட்டில் என்னுடைய மற்றொரு ரோல் மாடல் தோனி. அவர் எப்படி பேட்டிங்கில் போட்டிகளை முடித்துக் கொடுக்கிறாரோ அதேபோன்று நான் பந்துவீச்சில் போட்டிகளை முடித்துக் கொடுத்த விரும்புகிறேன். எனது தந்தைக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -