தீபக் சஹர் விலகல்.. கொல்கத்தா போட்டியில் 3 மாற்றங்களை செய்த ருதுராஜ்.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இவ்விரு அணிகளை பொறுத்த வரை சென்னை இது வரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக சேப்பாக்கத்தில் நடந்த இரண்டு போட்டிகளில் வென்ற சென்னை அதற்கு வெளியே விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. எனவே வெற்றி பாதைக்கு திரும்ப இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்கியது. மறுபுறம் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா சொந்த மண்ணாக இருந்தாலும் சென்னையை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்கியது.

- Advertisement -

சிஎஸ்கே லெவன்:
அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அத்துடன் கடந்த போட்டியில் விளையாடாத வங்கதேச முஸ்தபிசூர் ரகுமான் இப்போட்டியில் விளையாடுவதாக அறிவித்த அவர் தீபக் சஹார் காயத்தால் விளையாடவில்லை என்றும் தெரிவித்தார். அவருக்கு பதிலாக இந்த வருடம் மீண்டும் புதிதாக வாங்கப்பட்டுள்ள ஷார்துல் தாக்கூர் அணிக்குள் சேர்க்கப்படுவதாகவும் ருதுராஜ் அறிவித்தார்.

அத்துடன் சமீர் ரிஸ்வி மீண்டும் சேர்க்கப்படுவதாக அறிவித்த அவர் டாஸ் வென்று பேசியது பின்வருமாறு. “டாஸ் வென்றது நல்லது. இன்று இரவு பனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாங்கள் முதலில் பந்து வீசுவதாக அறிவிக்கிறோம். 2 சிறிய தோல்விகளால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் அணியில் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்”

- Advertisement -

“எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக காத்திருக்கிறோம். கொல்கத்தா நன்றாக விளையாடி வருகிறது. இருப்பினும் நாங்கள் எங்களுடைய திட்டங்களை எளிமையாக வைத்து செயல்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளோம். பதிரனா விளையாடவில்லை. ரஹ்மான் மீண்டும் வருகிறார். தீபக் சஹர் காயமடைந்ததால் சர்துல் தாக்கூர், சமீர் ரிஸ்வி ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பும்ராவை விட.. கடைசி ஓவரில் 10 ரன்ஸ் கட்டுப்படுத்த அவர் தான் சிறந்த பவுலர்.. பாபர் அசாம் தேர்வு

கொல்கத்தா எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்தரா, அஜிங்க்ய ரகானே, டேரில் மிட்சேல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா எம் எஸ் தோனி (கீப்பர்), சர்துல் தாகூர் முஸ்தஃபிஸூர் ரஹ்மான், துசார் தேஸ்பாண்டே, மஹீஸ் திக்சனா

Advertisement