பும்ராவை விட.. கடைசி ஓவரில் 10 ரன்ஸ் கட்டுப்படுத்த அவர் தான் சிறந்த பவுலர்.. பாபர் அசாம் தேர்வு

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வழக்கம் போல பவுலர்களை அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து தங்களுடைய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக அபிஷேக் போரெல், ரியன் பராக் போன்ற இளம் வீரர்கள் கடைசி ஓவரில் 20க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து அசத்தினார்கள். அதன் உச்சமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் ரொமாரியோ செஃபார்ட் 32 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்காவின் அன்றிச் நோர்ட்ஜே வீசிய 20வது ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 32 ரன்கள் குவித்த அவர் மொத்தம் 39* (10) ரன்கள் குவித்து மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் எப்போதும் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசுவது உலகின் எப்பேர்ப்பட்ட தரமான பவுலர்களுக்கும் சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாபர் அசாம் தேர்வு:
ஆனால் அது போன்ற சூழ்நிலையிலும் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக செயல்படக் கூடியவராக அறியப்படுகிறார். ஏனெனில் இந்த சீசனில் ஹைதெராபாத் 277 ரன்கள் அடித்து நொறுக்கிய போட்டியில் மற்ற மும்பை பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் வாரி வழங்கினர். ஆனால் அந்தப் போட்டியிலும் 4 ஓவரில் 36 ரன்கள் மட்டும் கொடுத்த பும்ரா 9 என்ற எக்கனாமியில் பந்து வீசி அசத்தினார்.

அதே போல 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்ட மும்பை – டெல்லி அணிகள் மோதிய போட்டியிலும் 4 ஓவரில் வெறும் 22 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து 5.5 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசினார். எனவே 20வது ஓவரில் வெறும் 10 ரன்களாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு பும்ரா தான் சரியான பவுலர் என்பதே பல ரசிகர்களின் தேர்வாகும்.

- Advertisement -

இந்நிலையில். “டி20 போட்டியில் கடைசி ஓவரில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு 10 ரன்கள் தேவைப்படும் போது அதை கட்டுப்படுத்த உங்களுக்கு நசீம் ஷா அல்லது ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய 2 தேர்வு இருக்கிறது. ஒரு கேப்டனாக அதில் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என்று சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சற்று யோசிக்காத பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வு.. மைதானத்தில் ரசிகர்களை நெகிழவைத்த மும்பை இந்தியன்ஸ் அணியினர்

“நசீம் ஷா. முதலில் காயத்திலிருந்து குணமடைந்த அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய திறமைகள் அற்புதமானதாகும். பாகிஸ்தானில் இது போன்ற திறமைகளை நம்மால் அடிக்கடி பார்க்க முடியாது. ஷாஹீன் அஃப்ரிடி தனக்கென்று ஒரு கிளாஸை வைத்துள்ளார். ஆனால் வித்தியாசமான திட்டங்களை வைத்திருக்கும் நசீம் விலைமதிப்பற்ற அனுபவத்தை கற்றுக் கொண்டு வருகிறார்” என்று கூறினார்.

Advertisement