14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வு.. மைதானத்தில் ரசிகர்களை நெகிழவைத்த மும்பை இந்தியன்ஸ் அணியினர்

Pandya-and-Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

இந்த தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியிருந்த மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஆறுதல் அளித்துள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்தது.

பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி இறுதி வரை போராடி 205 ரன்கள் மட்டுமே குவித்ததால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியை நேரில் ஆதரிக்க 20,000 பள்ளி குழந்தைகள் நேரில் வர வைக்கப்பட்டிருந்தனர்.

- Advertisement -

கடந்த 14 ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான நீதா அம்பானி ஏதாவது ஒரு போட்டியின் போது இப்படி பள்ளி குழந்தைகளை நேரில் அழைத்து வந்து மைதானத்தில் போட்டியை காண ஏற்பாடு செய்து கொடுப்பார். அந்த வகையில் இந்த போட்டிக்காக 20,000 பள்ளி குழந்தைகள் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர்.

இதையும் படிங்க : பெண்கள்’ன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? சஞ்சய் மஞ்ரேக்கரை விளாசும் ரசிகர்கள்

அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அணி பெற்ற முதல் வெற்றியை நேரில் ரசித்த அவர்களுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் போட்டி முடிந்த கையோடு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பாண்டியாவின் தலைமையில் மைதானத்தை சுற்றி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement