பெண்கள்’ன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா? சஞ்சய் மஞ்ரேக்கரை விளாசும் ரசிகர்கள்

Sanjay Manjrekar 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் 2024 டி20 தொடர் மகிழ்வித்து வருகிறது. அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 4 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தலான வெற்றி பெற்றது.

முன்னதாக ஜெய்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிதியுதவி வழங்கும் வகையில் ராஜஸ்தான் அணி ஸ்பெஷலான இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது. மேலும் அப்போட்டியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு 100 டிக்கெட்டில் கிடைக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை தங்கள் மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்கு நன்கொடையாக கொடுக்க உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அதை விட அந்தப் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ராஜஸ்தானின் கிராமப்பகுதிகளில் மின்சாரம் வசதி இல்லாத 6 ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்சார வசதியை செய்து கொடுக்க உள்ளதாகவும் ராஜஸ்தான் அறிவித்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் டாஸ் வீசுவதற்கு முன்பாக ஒரு ராஜஸ்தான் பெண்மணி பாரம்பரிய உடையில் வந்து சூரிய சக்தி விளக்கை சஞ்சு சாம்சனிடம் கொடுத்தார்.

அதை சஞ்சு சாம்சன் பெங்களூரு கேப்டன் டு பிளேஸியிடம் பரிசாக கொடுத்தார். அந்த தருணங்களை டாஸ் வீசுவதற்காக தொகுப்பாளராக களத்தில் நின்ற முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஒலிபெருக்கியில் ரசிகர்களுக்காக விளக்கினார். ஆனால் அதைச் சொல்லி முடித்ததும் கடைசியில். “இப்போது காற்றில் டாஸ் வீசுவதற்கான உண்மையான பிஸ்னஸ்க்கு திரும்பி செல்வோம்” என்று அவர் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதாவது “ஒன்றுக்கும் உதவாத இந்த பெண்கள் முன்னேற்ற நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது அடுத்ததாக நாம் டாஸ் வீசுவதற்கு செல்வோம்” என்ற தோரணையில் சஞ்சய் மஞ்ரேக்கர் மறைமுகமாக சொன்னார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பெண்களுக்காக ராஜஸ்தான் நிர்வாகம் நடத்திய அந்த நிகழ்வை ஒரு பொருட்டாக மதிக்காத வகையில் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசினார்.

இதையும் படிங்க: தேவைப்படும் நேரத்துல அதை செய்ய கரெக்ட்டா வருவேன்.. எல்லாத்தையும் கிளிக் பண்ணிட்டோம்.. பாண்டியா பேட்டி

அதனால் கோபமடைந்த ரசிகர்கள் பெண்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? என்று அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்பாக டாஸ் வீசும் நிகழ்வில் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்ட மும்பை ரசிகர்களிடம் “மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார். ஆனால் தற்போது பெண்களை மதிக்காத நீங்கள் முதலில் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று அவரை ரசிகர்கள் விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement