தேவைப்படும் நேரத்துல அதை செய்ய கரெக்ட்டா வருவேன்.. எல்லாத்தையும் கிளிக் பண்ணிட்டோம்.. பாண்டியா பேட்டி

Hardik Pandya 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் 3 தோல்விகளுக்குப் பின் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது. அதனால் ஹாட்ரிக் தோல்விகளை நிறுத்திய ஹர்திக் பாண்டியா மும்பையின் கேப்டனாக முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்துள்ளார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலையில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினர். அதனால் கோபமடைந்த ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிராக உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

பாண்டியா கருத்து:
இருப்பினும் அதே மைதானத்தில் டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை ரசிகர்கள் யாரும் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் காரணமாக கடைசியில் வெற்றி பெற்றதும் பாண்டியா தலைமையிலான மும்பை அணியினர் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு சுற்றி வந்து கைதட்டி பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களுடைய அணியில் தெளிவாகப் பேசி அனைத்து வீரர்களின் மனதில் இருந்த குழப்பங்களை நீக்கியுள்ளதாக பாண்டியா தெரிவித்துள்ளார். அத்துடன் டெல்லிக்கு எதிரான போட்டியில் தங்களுக்கு அனைத்தும் வேலை செய்ததாகவும் பாண்டியா கூறியுள்ளார். மேலும் அப்போட்டியில் தேவைப்படாத காரணத்தாலேயே பந்து வீசாத தாம் சரியான நேரத்தில் பவுலிங் செய்வேன் என்றும் பாண்டியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது நிறைய கடின உழைப்பாகும். நாங்கள் அணியில் உள்ள நிறைய மனங்களை தெளிவு படுத்தினோம். எங்கள் திட்டங்கள் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்துள்ளோம். இன்று எல்லாமே கிளிக் செய்த நாளாக அமைந்தது. எங்களை சுற்றி நிறைய அன்பும் அக்கறையும் வந்தது. 3 போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தோம் என்பது தெரியும்”

இதையும் படிங்க: தோனி இல்ல.. 2008லயே தெரியும்.. வாழ்நாளில் சிஎஸ்கே’வுக்கு விளையாடாமல் போக அவர் தான் காரணம்.. டிகே

“ஆனால் ஒருவரை ஒருவர் ஆதரிக்கும் நம்பிக்கையும் அணுகுமுறையும் எங்களிடம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைப்பட்டது. அது கிடைத்த இன்றைய நாள் எங்களுடைய வெற்றிப் பாதை துவங்கியுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். எனவே சரியான நேரத்தில் நான் பந்து வீசுவேன். இன்று நாங்கள் அனைத்தையும் கவர் செய்தோம். எனவே நான் பந்து வீசுவதற்கான சூழல் ஏற்படவில்லை” என்று கூறினார்.

Advertisement