தோனி இல்ல.. 2008லயே தெரியும்.. வாழ்நாளில் சிஎஸ்கே’வுக்கு விளையாடாமல் போக அவர் தான் காரணம்.. டிகே

Dinesh Karthik 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடி விளையாடி வருகிறார். கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக் சர்வதேச அரங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதே காலகட்டத்தில் அறிமுகமான தோனி மிகச் சிறப்பாக விளையாடி கேப்டனாக முன்னேறி 3 ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.

அதன் காரணமாக கடைசி வரை இந்திய அணியில் நிலையான வாய்ப்பு பெறாத தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் 2008 முதல் கடந்த 16 வருடங்களாக டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார். ஆனால் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அவருக்கு கனவாகவே போயுள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே வாய்ப்பு:
ஏனெனில் 38 வயதாகும் தினேஷ் கார்த்திக் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் 2008 ஐபிஎல் ஏலத்தில் வி.பி. சந்திரசேகர் தோனியை எடுத்த போதே தமக்கு எப்போதும் சிஎஸ்கே அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்ருமாறு.

“ஏலம் நடைபெற்ற போது நான் என்ன சொன்னாலும் இது தலைப்புச் செய்தியாகிறது. நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான அனுமானத்தை தான் நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும் தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி. சந்திரசேகர் தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார்”

- Advertisement -

“எனவே சிஎஸ்கே அணிலும் இருந்த அவர் என்னை ஐபிஎல் தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன். இருப்பினும் கடைசியில் அவர் தோனியை வாங்கியதால் நான் எப்போதும் சிஎஸ்கே அணியில் அங்கமாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாங்கள் இருவரும் இந்திய அணியில் அங்கமாக இருந்தோம். அதில் நான் சற்று தடுமாற்றமாக இருந்தேன்”

இதையும் படிங்க: அந்த ஒரு சாதனையில் தோனியை யாராலும் நெருங்க முடியாது.. சிஎஸ்கே’வை வீழ்த்துவேன்.. கம்பீர் சவால்

“எனவே தோனியுடன் என்னையும் ஒரே அணியில் சிஎஸ்கே தேர்வு செய்யாது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் அப்போது தான் சிஎஸ்கே அணியின் ஒரு பகுதியாக நான் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு புரிந்தது” என்று கூறினார். முன்னதாக 2008 ஐபிஎல் தொடரில் முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற தமிழக வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே நிர்வாகம் கீப்பராக தோனியை தேர்ந்தெடுத்ததால் தினேஷ் கார்த்திக்கை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement