அந்த ஒரு சாதனையில் தோனியை யாராலும் நெருங்க முடியாது.. சிஎஸ்கே’வை வீழ்த்துவேன்.. கம்பீர் சவால்

Gautam Gambhir 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நான் ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இப்போட்டியில் கொல்கத்தாவை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்கியுள்ளது. ஆனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று எதிரணிகளை மிரட்டி வரும் கொல்கத்தா இப்போட்டியில் சென்னைக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

பாராட்டும் சாவலும்:
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்பாக முன்பாக எம்எஸ் தோனியை பாராட்டி பேசியுள்ள கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் சென்னையை வீழ்த்துவேன் என்று நம்பிக்கையை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள், பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும்”

“ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே தோனியும் சொல்வார். எம்.எஸ். தோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“ஏனென்றால் தோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்”

இதையும் படிங்க: டி20 வரலாற்றிலே முதல் முறை.. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த மாஸ் சம்பவம் – வேறெந்த டீமும் பண்ணாத சாதனை

“அதே சமயம் சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாதூரியமாக செயல்படக்கூடிய தோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்” எனக் கூறினார்.

Advertisement