டி20 வரலாற்றிலே முதல் முறை.. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த மாஸ் சம்பவம் – வேறெந்த டீமும் பண்ணாத சாதனை

Rohit-and-Shepherd
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் ஆட்டமானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்தது.

- Advertisement -

மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்களையும், டிம் டேவிட் 45 ரன்களையும், இஷான் கிஷன் 42 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா 39 ரன்களை குவித்து அசத்தினர். பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது :

20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்ததால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் படைக்காத சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மும்பை அணி இந்த போட்டியின் மூலம் படைத்த சாதனை யாதெனில் : ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் ஒரு டி20 இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்த அணியாக தற்போது மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக சோமர்செட் மற்றும் கென்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சோமர்செட் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் 226 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இதையும் படிங்க : வெற்றிக்கு இது நல்ல ஐடியா கிடையாது.. தோனியை கட்டாயப் படுத்தாதீங்க.. மைக்கேல் கிளார்க் கருத்து

இவ்வேளையில் தற்போது மும்பை அணி நேற்று அடித்த 234 ரன்கள் மூலம் அந்த சாதனையை தகர்த்துள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 49 ரன்கள், டிம் டேவிட் 45 ரன்கள், இஷான் கிஷன் 42 ரன்கள், ஹார்டிக் பாண்டியா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் 39 ரன்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement