வெற்றிக்கு இது நல்ல ஐடியா கிடையாது.. தோனியை கட்டாயப் படுத்தாதீங்க.. மைக்கேல் கிளார்க் கருத்து

Micheal Clarke
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை முதல் 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்த அந்த அணி தற்போது 4வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் ஏப்ரல் 8ஆம் தேதி வலுவான கொல்கத்தாவை அதனுடைய சொந்த ஊரில் எதிர்கொள்கிறது.

அப்போட்டியில் ரசல், சுனில் நரேன், ரிங்கு சிங் போன்ற அதிரடி வீரர்களைக் கொண்டுள்ள கொல்கத்தாவை சமாளித்து சிஎஸ்கே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை துறந்து விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் எம்.எஸ். தோனி முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யவில்லை.

- Advertisement -

கிளார்க் கருத்து:
மேலும் டெல்லிக்கு எதிராக வெற்றி பறிபோன பின் 37* (16) ரன்கள் அடித்த அவர் ஹைதராபாத்துக்கு எதிரான 4வது போட்டியிலும் கடைசி ஓவரில் வந்து 1* (2) ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணிக்கு உதவவில்லை. அதனால் தோனி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் தோனி முன்கூட்டியே களமிறங்குவது சரியான முடிவல்ல என தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“அப்படியானால் டேரில் மிட்சேல், ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபேவுக்கு முன் தோனி களமிறங்க வேண்டும். அது சரியான முடிவா? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது சரியான முடிவாக இருக்காது. கடந்த வருடத்தை போலவே இம்முறையும் தோனி ஓரிரு பந்துகளை எதிர்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை அடிப்பதையே நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“ருதுராஜ்க்கு ஆலோசனை கொடுப்பதும் விக்கெட் கீப்பிங் செய்வதுமே தோனியின் பலம். எனவே அவரை 3, 4வது இடத்தில் இறக்குவது நல்ல ஐடியா கிடையாது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் தோனியை முன்கூட்டியே களமிறக்க கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூறிய மைக்கேல் கிளார்க் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சரியாக சொன்னீர்கள் சஞ்சய். தோனி அதை செய்ய வேண்டியதில்லை. சில நேரங்களில் அவர் டாப் ஆர்டரில் விளையாடினாலும் பொதுவாக தோனி என்பவர் ஃபினிஷர்”

இதையும் படிங்க: முதல் ஓவருடன் வெளியேறிய மயங் யாதவ்.. காயத்தின் நிலை என்ன? க்ருனால் பாண்டியா கொடுத்த அப்டேட்

“இந்த விளையாட்டின் மகத்தான ஃபினிஷரான தோனி அதை மாற்ற வேண்டியதில்லை. தோனி கடைசியில் இருப்பது ஆரம்பத்தில் களமிறங்கும் மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக ரிஸ்க் எடுத்து விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும். தோனி நீண்ட காலமாக தேவையான அளவுக்கு கடினமான வேலைகளை செய்து முடித்து விட்டார். எனவே இது மற்ற வீரர்கள் அசத்த வேண்டிய நேரமாகும்” என்று கூறினார்.

Advertisement