முதல் ஓவருடன் வெளியேறிய மயங் யாதவ்.. காயத்தின் நிலை என்ன? க்ருனால் பாண்டியா கொடுத்த அப்டேட்

Krunal Pandya
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற்ற 21வது லீக் போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ மார்கஸ் ஸ்டோனிஸ் 58, நிக்கோலஸ் பூரான் 32*, கேப்டன் ராகுல் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 164 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

ஆனால் அதைத் துரத்திய குஜராத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 18.5 ஓவரில் 130 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31, ராகுல் திவாட்டியா 30 ரன்கள் நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக யாஸ் தாக்கூர் 5, க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் லக்னோ வீரர் மயங் யாதவ் முதல் ஓவருடன் காயத்தால் வெளியேறினார்.

- Advertisement -

ஒரு ஓவருடன் வெளியேற்றம்:
இந்த வருடம் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் 155 கி.மீ வேகத்தில் வீசி அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்து 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல பெங்களூருவுக்கு எதிரான போட்டியிலும் 157 கி.மீ வேகத்தில் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் மீண்டும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

அதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே தன்னுடைய முதல் 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அத்துடன் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி துல்லியமாக பந்து வீசியாக அவர் பிரட் லீ முதல் ஸ்டீவ் ஸ்மித் வரை பலரது பாராட்டுகளையும் பெற்றார். அதனால் விரைவில் இந்தியாவுக்காகவும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே வழக்கத்திற்கு மாறாக 145க்கும் குறைவான கிலோமீட்டர் வேகத்தில் வீசி தடுமாறிய அவர் 6 பந்துகளுக்கு மேல் விளையாட முடியாமல் பாதியிலேயே வெளியேறியது இந்திய ரசிகர்களை பதற வைத்தது. இருப்பினும் இது லேசான காயம் என்று தெரிவிக்கும் க்ருனால் பாண்டியா விரைவில் அவர் விளையாடுவார் என்று போட்டியின் முடிவில் தெரிவித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணிக்கு இடம்மாறும் ரோஹித் சர்மா.. காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் – காவ்யா மாறன் உறுதி

“மயங் யாதவுக்கு என்னவாயிற்று என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் போட்டி நடைபெறும் போதே நான் அவரிடம் சில நொடிகள் பேசினேன். அப்போது அவர் நன்றாக இருந்தார். வலைப்பயிற்சியில் நெருப்பாக செயல்பட்ட செயல்படும் அவர் கடந்த வருடம் காயத்தால் விளையாடவில்லை. இருப்பினும் அவருக்கு பிரகாசமான வருங்காலம் உள்ளது. எனவே இங்கிருந்து தன்னுடைய கேரியரில் அவர் எப்படி முன்னேறுவார் என்பதை பார்ப்பது சுவாரசியமானது” என்று கூறினார்.

Advertisement