சன் ரைசர்ஸ் அணிக்கு இடம்மாறும் ரோஹித் சர்மா.. காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் – காவ்யா மாறன் உறுதி

Kavya-Maran
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீரர்களுக்கான மினி ஏலமானது துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட அனைத்து அணிகளும் தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்வு செய்தனர். அதேபோன்று இந்த ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்களை ஒரு சில அணிகள் டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டனர். அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக விளையாடிய ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் மூலம் தங்களது அணியில் இணைத்த மும்பை அணியின் நிர்வாகம் அவருக்கு நேரடியாக கேப்டன் பதவியையும் வழங்கியது.

அப்படி ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கி விட்டு ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியது. அதோடு தற்போது ஹார்டிக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாடி வரும் ரோகித் சர்மாவுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்கிற பேச்சும் இருந்து வருகிறது.

- Advertisement -

இப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏகப்பட்ட சலசலப்பு நிகழ்ந்து வரும் வேளையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மெகா ஏலம் நடைபெற இருக்கும் வேளையில் ரோகித் சர்மா நிச்சயம் மும்பை அணியிலிருந்து வெளியேறி வேறொரு அணிக்காக விளையாடுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

அதோடு ரோகித் சர்மாவை அவர்களது அணியில் எடுக்க பல்வேறு அணிகளும் தயாராக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட் கமின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வேளையில் அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ரோகித் சர்மா ஒருவேளை மும்பை அணியிலிருந்து வெளியேறினால் அவரை எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் அடுத்த 2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் போது ரோகித் சர்மா தங்களது அணிக்காக விளையாட வந்தால் நிச்சயம் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்குவோம் என்றும் அதற்காக தற்போதே அவருக்கு பணம் குறிப்பிடாத காசோலை காவ்யா மாறன் தரப்பில் இருந்து வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : சாய் சுதர்சனிடம் தடுமாறிய தமிழக வீரர்.. அமித் மிஸ்ரா, அனில் கும்ப்ளேவை முந்தி மோசமான சாதனை

ஏனெனில் ஐபிஎல் விதிப்படி ஒரு சீசன் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அணியின் வீரரை மற்ற அணிகளை சேர்ந்த வீரர்களோ, நிர்வாகமோ நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது. அதோடு பணம் குறித்த எந்த விவரத்தையும் பரிமாறக்கூடாது. அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு காசோலை வழங்கப்பட்டு இருக்காது என்பதே உண்மை. ஆனால் ஒருவேளை ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் அணிக்கு வந்தால் நிச்சயம் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.

Advertisement