சாய் சுதர்சனிடம் தடுமாறிய தமிழக வீரர்.. அமித் மிஸ்ரா, அனில் கும்ப்ளேவை முந்தி மோசமான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற்ற 21வது லீக் போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 163/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58, நிக்கோலஸ் பூரான் 32* ரன்கள் எடுத்தனர்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 164 ரன்களை துரத்திய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 (23) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதே போல மிடில் ஆர்டரில் ராகுல் திவாட்டியா 30 ரன்கள் எடுத்து போராடினார். ஆனால் கேப்டன் கில் 19, கேன் வில்லியம்சன் 1, விஜய் சங்கர் 17 என இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவிட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
அதனால் 18.5 ஓவரில் குஜராத்தை ஆல் அவுட் செய்து சிறப்பான வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக யாஷ் தாக்கூர் 5, க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக 5வது ஓவரை லக்னோ அணிக்காக இளம் தமிழக ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் வீசினார். அதை மற்றொரு சாய் சுதர்சன் எதிர்கொண்டது தமிழக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த ஓவரில் சாய் சுதர்சனுக்கு எதிராக 4வது பந்தில் நோ-பால் போட்ட மணிமாறன் மீண்டும் அதே பந்தில் நோ-பால் போட்டார். இருப்பினும் அதற்காக வழங்கப்பட்ட ஃபிரீ ஹிட்டில் பவுண்டரிகள் எதுவும் கொடுக்காத அவர் மீண்டும் 6வது பந்தில் நோ-பால் போட்டு மொத்தமாக 12 ரன்கள் கொடுத்தார். அந்த வகையில் ஓரே ஓவரில் 3 நோ-பால்களை போட்ட மணிமாறன் சித்தார்த் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக நோ-பால்களை வீசிய சுழல் பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2009, 2010, 2011, 2016 ஆகிய ஐபிஎல் தொடர்களில் முறையே அமித் மிஸ்ரா, ஜாம்பவான் அனில் கும்ப்ளே, யோகேஷ் நாகர், அமித் மிஸ்ரா ஆகியோர் அதிகபட்சமாக ஒரு ஓவரில் தலா 2 நோபால்களை வீசியதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் கடந்த போட்டியில் விராட் கோலியை தன்னுடைய முதல் விக்கெட்டாக எடுத்து அசத்திய மணிமாறன் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நோபால்களை போட்டு தடுமாறினார்.

இதையும் படிங்க: அவர் ஒருத்தர் டீம்ல இல்லாம போனதால தான் இந்த மேட்சை தோத்துட்டோம் – சுப்மன் கில் கொடுத்த விளக்கம்

இருப்பினும் அதன் பின் சுதாரித்து செயல்பட்ட அவர் 4 ஓவரில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் 29 ரன்கள் மட்டும் கொடுத்து 7.2 என்ற நல்ல எக்கனாமியில் பந்து வீசி முடித்தார். அதனால் இந்த போட்டியில் வெற்றியை பெற்ற லக்னோ புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement