அவர் ஒருத்தர் டீம்ல இல்லாம போனதால தான் இந்த மேட்சை தோத்துட்டோம் – சுப்மன் கில் கொடுத்த விளக்கம்

Gill
- Advertisement -

லக்னோ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-ஆவது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்களையும், கே.எல் ராகுல் 33 ரன்களையும், பூரான் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலே இந்த தோல்வியை சந்தித்துள்ளோம்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங்கை ஆரம்பித்து இருந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியாமல் போனது. மற்றபடி இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக அவர்களுக்கு எதிராக 163 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க : குஜராத் அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு இதுவே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

டேவிட் மில்லர் போன்று ஒரு வீரர் இருந்திருந்தால் நிச்சயம் இரண்டு ஓவர்களில் ஆட்டம் திரும்பி இருக்கும். அவர் இல்லாததை இந்த போட்டியில் பின்னடைவாக உணருகிறோம். இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் எங்களது மோசமான பேட்டிங் காரணமாகவே இந்த தோல்வியை சந்தித்துள்ளோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement