குஜராத் அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு இதுவே காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்க்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 32 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த வெற்றியை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். எங்களது அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது மைதானம் எப்படி இருக்கிறது என்பதை எங்களது பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டனர். ஒவ்வொரு முறை நாங்கள் 160 ரன்களுக்கு மேல் அடிக்கும் போது அந்த ரன்களை வைத்து வெற்றிகரமாக போட்டியை முடிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி. எங்களது அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கொல்கத்தா போட்டியில் ரஹ்மான், பதிரனா விளையாடுவார்களா? சிஎஸ்கே பவுலிங் கோச் எரிக் சிமன்ஸ் பதில்

லக்னோ மைதானத்தில் விளையாடும் போட்டிகள் எங்களுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை எங்களது அணியின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுமே மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி இருந்தனர். க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னாய் ஆகியோர் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள். அதோடு தற்போது சித்தார்த் மணிமாறனும் எங்கள் அணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எல் ராகுல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement