கொல்கத்தா போட்டியில் ரஹ்மான், பதிரனா விளையாடுவார்களா? சிஎஸ்கே பவுலிங் கோச் எரிக் சிமன்ஸ் பதில்

Eric Simmons
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த அந்த அணி தற்போது 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத கொல்கத்தா ரசல், ரிங்கு சிங், சுனில் நரேன் போன்ற வீரர்களால் எதிரணிகளை மிரட்டி வருகிறது. எனவே அந்த அணியை சமாளித்து சென்னை வெல்லுமா என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சுத் துறையில் 2 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரனா ஆகியோர் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

கோச் பதில்:
குறிப்பாக முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற ரஹ்மான் விசா பெறுவதற்காக திடீரென நாடு திரும்பியதால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அதே போல டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் பதிரனா லேசான காயத்தை சந்தித்ததால் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது விசா வேலையை முடித்துள்ள ரகுமான் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஹ்மான் அணியுடன் இணைந்தால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிமன்ஸ் மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால் இப்போதைக்கு உறுதியாக சொல்லும் அளவுக்கு அது தங்களுடைய கையில் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரஹ்மான் பற்றி இன்னும் எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை”

- Advertisement -

“பாஸ்போர்ட்டுக்காக அவர் வங்கதேசத்துக்கு சென்ற காரணத்தால் அது எங்கள் கையில் இல்லை. எனவே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால் எந்த நிலைமையாக இருந்தாலும் அதை சமாளிக்க ஒரு அணியாக நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பதிரனாவை பொறுத்த வரை இந்த தொடரில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறோம். இது மிகப்பெரிய தொடர்”

இதையும் படிங்க: கில்லுக்கு திட்டம் போட்டேன்.. மயங் யாதவ் இல்லாததால் இது உன்னோட நாள்’ன்னு அவர் சொன்னாரு.. யாஷ் தாக்கூர்

“அவர் இந்த போட்டியில் விளையாடுவாரா என்பதை உடற்பயிற்சியாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐபிஎல் நீண்ட தொடர் என்பதே எங்களுடைய ஒரே கவலையாகும். எனவே 4 போட்டிகளில் கண்டிப்பாக அவர் ஒன்றை விளையாட வேண்டும் என்று நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவு இருக்கும். இருப்பினும் அவர் அழகாக குணமடைந்து வருகிறார்” என்று கூறினார். அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பதிரனா விளையாட மாட்டார் என்று தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement