கில்லுக்கு திட்டம் போட்டேன்.. மயங் யாதவ் இல்லாததால் இது உன்னோட நாள்’ன்னு அவர் சொன்னாரு.. யாஷ் தாக்கூர்

Yash Thakur
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற்ற 21வது லீக் போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 163/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 58, நிக்கோலஸ் பூரான் 42, கேப்டன் ராகுல் 33 ரன்கள் எடுத்தனர். குஜராத் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் 164 ரன்களை சேசிங் செய்த குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 4 பவுண்டரியுடன் 31 (23) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 19 ரன்களில் அவுட்டானார். அதே போல கேன் வில்லியம்சன் 1, சரத் 2, விஜய் சங்கர் 17, தர்ஷன் நல்கண்டே 12, ராகுல் திவாட்டியா 30 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

நாயகனின் நாள்:
அதனால் 18.5 ஓவரிலேயே குஜராத்தை 130 ரன்களுக்கு சுருட்டி சிறப்பான வெற்றி பெற்ற லக்னோ சார்பில் அதிகபட்சமாக யாஷ் தாக்கூர் 5, க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 3வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அத்துடன் குஜராத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து லக்னோ சாதனை படைத்தது.

இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய யாஷ் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற மயங் யாதவ் இப்போட்டியில் லேசாக காயமடைந்ததால் 1 ஓவருடன் விலகி விட்டார். எனவே இது உன்னுடைய நாள் என்று கேப்டன் கேஎல் ராகுல் உத்வேகத்தை கொடுத்ததாக யாஸ் தாக்கூர் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றதில் மகிழ்ச்சி. கில்லுக்கு எதிராக நான் திட்டம் வகுத்தேன். அதை நான் பின்பற்றினேன். கேஎல் ராகுல் அதையே செய்யுமாறு சொன்னது வேலை செய்தது. துரதிஷ்டவசமாக மயங் யாதவ் காயமடைந்து விட்டார். எனவே இது உன்னுடைய நாள் என்பதால் அதை அதிகமாக பயன்படுத்திக் கொள் என்று கே.எல். ராகுல் என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: 163 ரன்ஸ் வைத்தே மிரட்டல்.. குஜராத்துக்கு எதிராக அவமான சாதனையை உடைத்து லக்னோ ஸ்பெஷல் வெற்றி

“ஐபிஎல் வரலாற்றில் நாங்கள் குஜராத்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளோம். அதில் மிகவும் மகிழ்ச்சி. சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தது மறக்க முடியாததாக அமைந்தது” என்று கூறினார். அந்த வகையில் மயங் யாதவ் இல்லாத நிலைமையை சமாளித்து லக்னோவை வெற்றி பெற வைத்த இந்த இளம் இந்திய வீரரும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement