அந்த பவுலரை வெளுத்து வாங்கி நான் பெரிய ஆள் ஆகனும். அதுவே என் ஆசை – யாஷ் துள் விருப்பம்

Dhull
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர்-19 உலககோப்பை 2022 தொடரை வெற்றி பெற்ற இந்தியா 5வது முறையாக இந்த உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளது. மேலும் இதுவரை வரலாற்றில் நடந்த 14 அண்டர்-19 உலக கோப்பைகளில் 8 முறை பைனலுக்கு தகுதி பெற்று விளையாடியுள்ள இந்தியா அதில் 5 முறை கோப்பைகளை வென்று இந்த உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

U19 World Cup 2022

- Advertisement -

இந்த உலகக் கோப்பையில் டெல்லியை சேர்ந்த இளம் வீரர் “யாஷ் துள்” இந்திய அணிக்கு அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். ஒரு நல்ல பேட்டிங் ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் இவர் முகமத் கைப், விராட் கோலி, உமுகுந்த் சந்த், பிரிதிவி ஷா ஆகியோர் வரிசையில் இந்தியாவிற்கு அண்டர்-19 உலக கோப்பையை வென்று கொடுத்த 5வது கேப்டனாக அசத்தியுள்ளார்.

கலக்கும் யாஷ் துள்:
இந்த உலக கோப்பையை வென்ற காரணத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றுள்ள இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் தனது சொந்த மாநிலத்தை சேர்ந்த அணியான டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு விளையாட ரூபாய் 50 லட்சம் என்ற நல்ல தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் மீண்டும் தனது சொந்த மாநிலமான டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

Yash Dhull

அதில் தமிழ் நாட்டுக்கு எதிரான முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி ரஞ்சி கோப்பை வரலாற்றில் அறிமுக போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த வீரர் என்ற சூப்பர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதனால் வரும் காலங்களில் இந்திய அணியில் விளையாடுவதற்கான பிரகாச வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஜோப்ரா ஆர்ச்சரை அடிக்கணும்:
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆசைப்படுவதாக யாஷ் துள் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் டெல்லி அணியின் அகாடமியில் இடம் வகித்திருந்ததால் அவர்கள் என்னை ஐபிஎல் ஏலத்தில் வாங்குவார்கள் என எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே ரிக்கி பாண்டிங் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு மிகச்சிறந்த அதிரடியான வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள விரும்புகிறேன். அத்துடன் ஐபிஎல் தொடரில் டெல்லிக்காக விளையாடும் போது டேவிட் வார்னருடன் பார்ட்னெர்ஷிப் அமைத்து ரன்களைக் குவிக்க மிகுந்த ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.

archer 1

இது வரை உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த யாஷ் துள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் இனி பல நட்சத்திர வீரர்களுடன் விளையாட உள்ளார். குறிப்பாக டெல்லி அணியின் பயிற்சியாளரான கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான கேப்டன் மற்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தலைமையில் டேவிட் வார்னர் போன்ற தரமான வீரர்களுடன் இணைந்து விளையாடி பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அவை அனைத்தையும் விட உலக கிரிக்கெட்டில் தற்போது அச்சுறுத்தலை அளிக்கும் ஒரு பந்து வீச்சாளராக விளங்கும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அதிரடியாக பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

விவிஎஸ் லக்ஷ்மன் – விராட் கோலி ஆதரவு:
அண்டர்-19 உலகக் கோப்பை பைனலுக்கு முன்பாக இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தங்களை தொடர்பு கொண்டு பேசியது பற்றி யாஷ் துள் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியுடன் விராட் கோலி அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது ஒரு மிகச்சிறந்த தருணமாகும். அவரின் உத்வேகம் நிறைந்த வார்த்தைகளால் இறுதிப்போட்டியில் அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்” என கூறினார்.

இதையும் படிங்க : தோனி தான் எனது ரோல் மாடல் – அதிவேக அரைசதம் விளாசி சாதனை படைத்த இந்திய வீராங்கனை

அதேபோல் அண்டர்-19 உலககோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார். அவரின் ஆலோசனைகள் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பது பற்றி யாஷ் துள் கூறியது பின்வருமாறு. “விவிஎஸ் லக்ஷ்மன் எங்களின் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகள் வழங்கியது மிகப்பெரிய உதவியாக இருந்தது. அவர் விலைமதிப்பில்லாத அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவரின் ஆலோசனைகள் பதற்றமான சூழ்நிலையில் எவ்வாறு பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என கற்றுக்கொள்ள உதவியது” என கூறினார்.

Advertisement