தோனி தான் எனது ரோல் மாடல் – அதிவேக அரைசதம் விளாசி சாதனை படைத்த இந்திய வீராங்கனை

Richa Gosh MS Dhoni
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 1 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது. அதில் முதலாவதாக நடந்த ஒரு டி20 போட்டியில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா அதை தொடர்ந்து துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் அடுத்தடுத்த பரிதாப படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.

IND-Womens

- Advertisement -

இதை அடுத்து குறைந்தபட்சம் 5 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு இந்த தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 251/9 ரன்கள் எடுத்தது.

வைட்வாஷ் தவிர்ப்பு; ரசிகர்கள் சோகம்:
இதை அடுத்து 252 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 84 பந்துகளில் அரைசதம் அடித்து 76 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ் 66 பந்துகளில் அரைசதம் அடித்து 57* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார். இதன் காரணமாக 46ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்த இந்தியா ஒருவழியாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

indianwomescricket

இதன் காரணமாக வைட்வாஷ் தோல்வியில் இருந்து தப்பிய இந்திய மகளிர் அணியினர் அடுத்தடுத்து தொடர் தோல்விகளுக்கு பின் ஒரு வழியாக கடைசி போட்டியில் வெற்றியை பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும் வரும் மார்ச் மாதம் இதே நியூசிலாந்து மண்ணில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 தொடர் நடைபெற உள்ளது. அதற்கு பயிற்சி எடுத்து தயாராகும் வண்ணம் நடைபெற்ற இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி இப்படி 4 – 1 என்ற கணக்கில் மண்ணை கவ்வியுள்ளது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

- Advertisement -

ரிச்சா கோஷ் சாதனை:
முன்னதாக இந்த தொடரின் 4வது போட்டியில் 192 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு ஷபாலி வர்மா, யாஷிகா பாட்டியா ஆகிய தொடக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். அடுத்து வந்த பூஜா வஸ்திக்கர், ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் 19/4 என்ற கணக்கில் படுமோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் உடன் இணைந்து கேப்டன் மிதாலி ராஜ் மீட்டெடுக்க போராடினார்.

womens ind

அதில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த இளம் வீராங்கனை ரிச்சா கோஸ் வெறும் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை (26 பந்துகள்) என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். இருப்பினும் கூட அந்தப் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

எம்எஸ் தோனி ரோல் மாடல்:
இந்நிலையில் வெறும் 18 வயது நிரம்பியுள்ள இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் சமீபகாலங்களாகவே மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறார். இதன் காரணமாக வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 2022 ஐசிசி மகளிர் உலக கோப்பைக்கான விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் தனக்கான ஒரு முக்கிய இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : எல்லோரும் அவரைப்போல் ஆகிவிட முடியுமா? – இளம் வீரர் பற்றி ஆகாஷ் சோப்ரா ! கோபத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் தன்னுடைய ரோல் மாடல் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் எம்எஸ் தோனி என்று ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் உடன் நிகழ்ந்த உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது சிறுவயதில் நான் எனது தந்தையை பார்த்து வளர்ந்தேன். அந்த சமயங்களில் எனது தந்தையுடன் பயிற்சி எடுக்கும் நான் அவரின் அதிரடியான பேட்டிங் முறையை பின்பற்ற துவங்கினேன்.

அதன்பின் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை பார்க்கத் துவங்கிய நான் எம்எஸ் தோனி பின்பற்ற துவங்கினேன். அவரின் அதிரடியான அதிரடியான பேட்டிங் மற்றும் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவர்தான் என்னுடைய ரோல் மாடல்” என பெருமையுடன் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இருக்கும் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய மகளிர் அணியில் வளர்ந்து வரும் வீராங்கனையாக இருக்கும் ரிச்சா கோஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement