எல்லோரும் அவரைப்போல் ஆகிவிட முடியுமா? – இளம் வீரர் பற்றி ஆகாஷ் சோப்ரா ! கோபத்தில் ரசிகர்கள்

Chopra
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இன்று துவங்கும் இந்த டி20 தொடரின் முதல் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்று முடிந்த பின் எஞ்சிய 2 போட்டிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் பல நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்தியா தசுன் சனாகா தலைமையில் ஒரு சில தரமான வீரர்களை கொண்ட இலங்கையை எதிர்கொள்கிறது.

INDvsSL

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா அதே தர வரிசையில் 9வது இடத்தில் தவிக்கும் இலங்கையை எதிர்கொள்ளும் இந்த தொடரானது வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை 2022 தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறுகிறது.

கலக்கும் வெங்கடேஷ் ஐயர்:
இந்த தொடரில் கடந்த சில மாதங்களாக காயத்தால் விலகியிருந்த நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது அதிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது. அவருடன் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த டி20 தொடரில் இந்தியாவிற்காக விளையாட உள்ளார்.

Jaffer

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடத் தொடங்கிய இவர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடும் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அத்துடன் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஒரு சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய காரணத்தால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் கடந்த சில மாதங்களாக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் இடத்தில் விளையாடி வந்த இவருக்கு இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தான் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனாலும் அதற்காக தயங்காத அவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் 3 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து பினிஷிங் கொடுத்தார். மேலும் தேவைப்படும் நேரத்தில் 6வது பவுலராக பந்து வீசி ஒரு நல்ல வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டராக விளங்கும் இவருக்கு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Akash

பாண்டியா ஆகிவிட முடியாது:
குறிப்பாக சமீப காலங்களாக முழு உடல் தகுதியுடன் இல்லாமல் பந்துவீச மறுப்பு தெரிவித்து வரும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் எல்லோரும் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் ஆகிவிட முடியாது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. ” உண்மை என்னவெனில் ஹர்திக் பாண்டியா ஹர்திக் பாண்டியா தான். அவர் இந்திய அணிக்கு வரும்போது பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார் என்பதால் அவரை இருகரம் கூப்பி வரவேற்க வேண்டும். ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அதற்காக மற்றொருவருக்கான கதவு மூடப்பட்டுவிடும் என்று நான் கூறமாட்டேன்”

- Advertisement -

“பாண்டியா அல்லது வெங்கடேஷ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தான் விளையாட வேண்டும் என்று அவசியமில்லை. இருவருமே ஒரே நேரத்தில் விளையாடலாம். அவர்கள் இருவருமே அணியில் இருந்தால் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவார். வெங்கடேஷ் ஐயர் ஒரு சில ஓவர்கள் வீசுவார்” என கூறியுள்ளார். கடந்த காலங்களில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடி தன்னை தரமான ஆல்ரவுண்டர் என நிரூபித்த காரணத்தால் அவரைப்போல வெங்கடேஷ் ஐயர் ஆகிவிட முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதேசமயம் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் விளையாடினால் கூட அது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

hardik2

ரசிகர்கள் கோபம்:
அவரின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் என்னதான் ஹர்திக் பாண்டியா நல்ல ஆல்-ரவுண்டராக இருந்தாலும் சமீப காலங்களாக பந்து வீசாமல் பேட்டிங் மட்டும் செய்வேன் என அடம்பிடித்து வருகிறார். அந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் முழு உடல் தகுதியை பெற்று பந்துவீச பயிற்சி எடுத்துக்கொண்டு இந்திய அணிக்கு திரும்புமாறு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கோரிக்கை வைத்திருந்தார்.

- Advertisement -

ஆனால் அதை மட்டம் தட்டிய அவர் ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 கோடிகளுக்கு கேப்டனாக செயல்படுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
எனவே நாட்டுக்காக விளையாட ஆர்வம் காட்டாத அவருக்கு பதில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் வெங்கடேஷ் ஐயரை எப்படி ஆகாஷ் சோப்ரா மட்டம் தட்டி பேசலாம் என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : வெளியான புதிய அறிவிப்பு, முதல் போட்டி முதல் பைனல் வரை போட்டிகளின் தேதி, மைதானங்கள் இதோ

ஆஸ்திரேலியா போன்ற மிகப்பெரிய மைதானங்களை கொண்ட நாடுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர்தான் மிகச் சிறப்பாக இருப்பார் என ஆகாஷ் சோப்ரா இது பற்றி மேலும் கூறியுள்ளார். இருப்பினும் தற்போது போல வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவருமே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடப் தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement