ஐபிஎல் 2022 : வெளியான புதிய அறிவிப்பு, முதல் போட்டி முதல் பைனல் வரை போட்டிகளின் தேதி, மைதானங்கள் இதோ

IPL
IPL Cup
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இந்த வருடம் வீரர்களுக்கான ஏலம் மெகா அளவில் நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் தங்களுக்கு தேவையான 204 வீரர்களை 550 கோடி ரூபாய் செலவில் அனைத்து 10 அணிகளும் வாங்கியுள்ளன.

ipl

- Advertisement -

இதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக காத்திருக்கிறது. இதை அடுத்து இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் ஐபிஎல் 2022:
முன்னதாக கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் திடீரென பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் பல தடைகளுக்குப் பின் ஒரு வழியாக எஞ்சிய ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் பிசிசிஐ நடத்தியது. அப்படிப்பட்ட இந்த வேளையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது.

Ganguly-ipl
IPL MI

அந்த தொடர் கேள்விகளுக்கு கடந்த மாதம் பதிலளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என உறுதியாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் வீரர்களின் நலனை கருதி இந்த வருடம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவித்தார். அதில் லீக் சுற்றுப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்அவுட் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆரம்பம் மற்றும் பைனல் தேதி:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடர் எப்போது துவங்க உள்ளது மற்றும் இந்த தொடரின் பைனல் எப்போது நடைபெற உள்ளது என்ற முக்கிய அறிவிப்பு பிரபல கிரிக்பஸ் இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 தொடரானது வரும் மார்ச் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் கோலாகலமாக தொடங்க உள்ளது. சுமார் 2 மாதங்கள் நடைபெற உள்ள இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது.

ipl trophy

இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மகாராஷ்டிராவிலும் பைனல் உட்பட நாக்அவுட் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் என ஏற்கனவே சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். அதன்படி ஐபிஎல் 2022 தொடரின் 55 லீக் சுற்று போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையில் உள்ள ப்ரோபர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் இதர 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக தெரியவருகிறது.

எத்தனை போட்டிகள்:
அதேபோல் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் மற்றும் குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 5 அணிகளும் 2வது பிரிவில் 5 அணிகளும் இடம் பெற உள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன. அதில் ஒரு அணி மும்பையில் உள்ள வான்கடே மைதாந்த்தில் 4 போட்டியிலும் மற்றும் டிஒய் பாட்டில் மைதானத்தில் 4 போட்டியிலும் விளையாட உள்ளது. அத்துடன் நவி மும்பையில் உள்ள ப்ராபர்ன் மைதானத்தில் 3 போட்டியிலும் மற்றும் புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 3 போட்டியிலும் ஒரு அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ipl

இருப்பினும் இந்த தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு அதில் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஏற்கனவே அறிவித்தது போல பிளே ஆப் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் மே 29ம் தேதி அகமதாபாத் நகரில் ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் பைனல் நடைபெறும் என நம்பப்படுகிறது.

Advertisement