டெஸ்ட் தொடரை வென்றும் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் – இந்தியாவின் நிலை என்ன?

IND-vs-WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் இருந்து துவங்கியது.

IND vs WI Rohit Sharma

- Advertisement -

இந்திய அணிக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக இந்த சுழற்சியில் அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த இரண்டாவது போட்டியின் கடைசி நாளான நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டமானது முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND vs WI

என்னதான் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி இருந்தாலும் தற்போது வெளியாகியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் படி இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள ஒரு ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 100% முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணி தாங்கள் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என 66.67 சதவீத புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 54.17 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 29.17 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : என்னங்க இது எங்களுக்கு கெடச்ச சேன்ஸ் இப்படி வேஸ்ட்டா போச்சே – டிராவிற்கு பிறகு வெ.இ கேப்டன் பேசியது என்ன?

வெஸ்ட் இண்டிஸ் அணி 16.67 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement