IND vs WI : என்னங்க இது எங்களுக்கு கெடச்ச சேன்ஸ் இப்படி வேஸ்ட்டா போச்சே – டிராவிற்கு பிறகு வெ.இ கேப்டன் பேசியது என்ன?

Kraigg-Brathwaite
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த நாட்டில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது டிரினிடாட் நகரில் இரண்டாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியை டிராவில் முடிவடித்துள்ளது.

IND vs WI

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் இந்த தொடரை இந்திய அணியிடம் இழந்துள்ளது. இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தும் மழையால் ஐந்தாம் நாள் போட்டி நடைபெறாததால் இந்த போட்டியில் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் போது பேட்டிங்கில் மிகச்சிறந்த போராட்டத்தை அளித்ததாக நினைக்கிறேன். பந்துவீச்சு துறையிலும் எங்களால் முடிந்த அளவு ஒழுக்கத்துடன் பந்து வீசியுள்ளோம்.

Siraj

இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் கொடுத்த கம்பேக் நன்றாக இருந்தது. முதல் இன்னிங்சின் பிற்பாதியில் 5 விக்கெட்டைகளை எளிதாக இழந்து விட்டோம். அது சற்று வருத்தமான ஒன்றுதான். ஆனாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 100-க்கும் மேற்பட்ட ஓவர்களை விளையாடியது பாசிட்டிவான ஒன்று.

- Advertisement -

இந்த போட்டியின் ஐந்தாவது நாளில் எங்களுக்கு முழுவதுமாக 98 ஓவர்கள் இருந்தபோது எங்களுது வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை பெய்து எங்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போனது. இந்த தொடரில் அதனேசி மற்றும் கிரிக் மெக்கன்சி ஆகியோர் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs WI : ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். மழை வந்து எல்லாத்தையும் முடிச்சிடுச்சி – கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

அந்த இருவருமே எங்களது ஒரு நம்பிக்கையை தந்துள்ளனர். வருங்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல நம்பிக்கையை பெற இது போன்ற வீரர்கள் அணிக்குள் இருப்பது அவசியம். நிச்சயம் நாங்கள் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை இனிவரும் தொடர்களிலும் கொடுப்போம் என கிரெய்க் பிராத்வெயிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement