- Advertisement -
இந்திய கிரிக்கெட்

WTC Final : வலைப்பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரோஹித் சர்மா. என்ன நடந்தது? – இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றடைந்து இறுதி கட்டப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாளை ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகி வரும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல காத்திருக்கிறது.

அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியும் தற்போது இந்த இறுதிப்போட்டிக்காக மும்முரமாக தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கவுள்ள வேளையில் இன்று கடைசி நாள் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இன்றைய கடைசி நாள் வலைப்பயிற்சியில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில் அவரது கட்டைவிரல் பகுதியில் பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பேண்டேஜ் சுற்றிக்கொண்ட ரோஹித் சர்மா அந்த பேட்டிங் பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதனால் நாளை இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்பாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இந்திய அணியின் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து அவரது காயத்தின் தன்மை குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதனால் ரோஹித் சர்மாவின் காயம் அவ்வளவு பெரியதாக அவரை பாதிக்காது என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : WTC Final : இந்தியாவை வீழ்த்த தரமான ஆஸி பிளேயிங் லெவனை – முதல் நாளே மறைமுகமாக அறிவித்த பட் கமின்ஸ்

வலைப்பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவரது காயம் குறித்த தகவலை அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டால் மட்டுமே நமக்கு முழுமையாக தெரியவரும். இருப்பினும் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த கட்டைவிரல் காயம் பெரியதாக இருக்கக் கூடாது என்றும் நிச்சயம் அவர் நாளைய போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by