இந்தியாவுக்குன்னா கசக்குறேன், இதுக்கு மட்டும் நான் இன்னிக்கிறனே? தேர்வுக்குழு சஹா தக்க பதிலடி – நடந்தது என்ன?

Saha
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டத்தை தவற விட்டது அஸ்வினை தேர்வு செய்யாதது போன்ற பல குளறுபடிகளால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதில் ஒன்றாக விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் இல்லாத நிலைமையில் தேர்வு செய்யப்பட்ட கேஎஸ் பரத் கீப்பிங்கில் அசத்தினாலும் பேட்டிங்கில் சுமாராகவே செயல்பட்டார்.

Saha

- Advertisement -

முன்னதாக 90 போட்டிகளில் விளையாடி 2014ஆம் ஆண்டு திடீரென ஓய்வு பெற்ற எம்எஸ் தோனிக்கு அடுத்ததாக ரித்திமான் சஹா நிலையான விக்கெட் கீப்பராக உருவெடுத்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர் 2010இல் அறிமுகமாகியும் தோனி இருந்ததால் வாய்ப்பு பெறாத நிலையில் ஒரு வழியாக 2014க்குப்பின் நிலையான வாய்ப்புகளைப் பெற்று விக்கெட் கீப்பராக அசத்தினர். ஆனாலும் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் தோனியையே மிஞ்சும் அளவுக்கு வெளிநாடுகளில் சதமடித்து காபா போன்ற சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றி நிரந்தர விக்கெட் கீப்பராக உருவெடுத்தார்.

இப்போ இனிக்குதோ:
அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்பட்ட சஹாவை கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா ஆகிய சீனியர்களுடன் சேர்த்து தேர்வுக்குழு கழற்றி விட்டது. அதிலும் குறிப்பாக ரிசப் பண்ட், கேஎஸ் பரத், இசான் கிசான் போன்ற இளம் விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் “வருங்காலங்களில் நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் இனிமேல் வாய்ப்பு தர மாட்டோம்” என்று அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தம்மிடம் நேரடியாக தெரிவித்ததாக சஹா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Wriddhiman Saha

அதன் காரணமாக இந்தியக் கேரியர் முடிந்ததாக கருதப்படும் அவர் ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் அணிக்காக 371 ரன்களை எடுத்து எதிர்பார்த்த அளவுக்கு நன்றாகவே செயல்பட்டார். அதனால் ரகானே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஹா தேர்வு செய்யப்பட வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் அதை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையின் 60வது சீசன் வரும் ஜூன் 28ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் நிலப்பரப்பை மையப்படுத்திய 6 மண்டலங்களை பெயர்களாகக் கொண்ட 6 அணிகள் களமிறங்கும் அந்த தொடரில் வடகிழக்கு அணிக்காக சஹாவை தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு விரும்பியுள்ளது. ஆனால் இனிமேலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்ற நிலைமையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி என்ன செய்யப் போகிறேன் என தேர்வு குழுவுக்கு பதிலளித்துள்ள சகா தமக்கு பதிலாக ஒரு இளம் வீரரின் வாய்ப்பை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Saha

குறிப்பாக இந்திய அணியில் தம்மை கசப்பாக பார்க்கும் தேர்வுகுழு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதை விரும்பவில்லை என்பதை திரிபுரா மாநில தேர்வுக்குழு தலைவரிடம் சஹா திட்ட விட்டமாக தெரிவித்து விட்டதாகவும் தெரிய வருகிறது. இது பற்றி திரிபுரா தேர்வுக்குழு தலைவர் ஜெயந்தா தேவ் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியாவுக்காக விளையாடும் நம்பிக்கை இருந்தால் துலீப் கோப்பையில் விளையாடுகிறேன் என்று ரித்திமான சஹா நியாயத்துடன் சொல்லி விட்டார்”

இதையும் படிங்க:அவங்க ரிட்டையராகும் வரை ஏன் வெய்ட் பண்றிங்க? ஆஸி மாதிரி அந்த முடிவை எடுங்க – தேர்வுக்குழுவுக்கு சாஸ்திரி ஓப்பன் கோரிக்கை

“ஒருவேளை இந்தியாவுக்காக எப்போதுமே விளையாடப் போவதில்லை என்றால் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி என்ன பயன்? என்று தெரிவித்த அவர் ஒரு இளம் வீரரின் இடத்தை தடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். எனவே அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரான அபிஷேக் போரெலை நாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம்” என்று கூறினார். இதன் காரணமாக இந்திய அணியில் சஹா இனிமேல் விளையாடப் போவதில்லை என்பது மற்றுமொரு முறை உறுதியாகியுள்ளது.

Advertisement