அவங்க ரிட்டையராகும் வரை ஏன் வெய்ட் பண்றிங்க? ஆஸி மாதிரி அந்த முடிவை எடுங்க – தேர்வுக்குழுவுக்கு சாஸ்திரி ஓப்பன் கோரிக்கை

Ravi-Shastri
- Advertisement -

இங்கிலாந்து நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடரில் தொடர்ந்து 10வது வருடமாக தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் கடந்த ஃபைனலில் இதே இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து எந்த பாடத்தையும் கற்காத இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் அஸ்வின் போன்ற வீரரை கழற்றி விட்டு சரியான அணியைத் தேர்வு செய்யாமல் மோசமாக தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

TEam India

- Advertisement -

அதை விட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட சீனியர் நட்சத்திர வீரர்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முன்னதாக உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக வெற்றிகரமாக செயல்பட்டும் சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இருகரப்பு தொடர்களில் வென்றாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியையே சந்தித்தது.

வெய்ட் பண்ணாதீங்க:
அந்த தோல்விக்கு சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்ததால் இப்போது போலவே ரசிகர்களுக்கு கொந்தளித்தனர். அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன் புதிய இளம் அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ வாங்கியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புஜாரா போன்ற நட்சத்திர சீனியர்கள் ஓய்வு பெறும் வரை காத்திருக்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவை கேட்டுக் கொள்ளும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காத்திருந்து காத்திருந்து காலங்கள் கடந்து விட்டதால் அவர்களை கழற்றி விட்டு ஆஸ்திரேலியா போல இளமையும் அனுபவமும் கலந்த அணியை உருவாக்குமாறு கூறியுள்ளார்.

pujara 1

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தேர்வுக்குழுவினர் அமர்ந்து தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வரைந்து நமது அணியை எப்படி கட்டமைக்கலாம் என்று சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இதை ஆஸ்திரேலியர்கள் பல வருடங்களாக செய்து வருகின்றனர். குறிப்பாக 3 வருடங்களுக்குள் என்ன செய்யலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர். அதே சமயம் 5 முக்கிய வீரர்கள் ஒரே சமயத்தில் ஓய்வு பெற்று வெளியேறும் வரை அவர்கள் காத்திருப்பதில்லை. அதாவது ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வருகிறது”

- Advertisement -

“எனவே அவர்களது அணி எப்போதும் இளமையும் அனுபவமும் கலந்ததாக இருக்கிறது. அதனால் இளம் வீரர்கள் விரைவாக சீனியர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதால் அணியும் ஆரோக்கியமாக சரியான பாதையில் செல்கிறது. எனவே அது போன்ற நிலைமையை இந்திய அணியில் கொண்டு வர சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதை சிலர் விரும்ப மாட்டார்கள் என்றாலும் அணி நலனுக்காக நீங்கள் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Ravi-Shastri

அவர் கூறுவது போல தற்போதைய அணியில் சுப்மன் கில் தவிர்த்து பேட்டிங் துறையில் அனைவருமே கலவையாக அல்லாமல் சீனியர்களாக இருக்கின்றனர். எனவே திடீரென சீனியர்கள் ஓய்வு பெறும் போது இந்தியா தடுமாறுவதற்கான நிலைமை ஏற்படலாம் என்பதால் இப்போதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்ப்பது வருங்காலத்தில் ஏற்படும் திண்டாட்டத்தை தவிர்ப்பதற்கான வழியாகும்.

இதையும் படிங்க:கோடிகள் கிடைக்கும் போது உள்ளூரில் ஏன் விளையாடனும்? இஷான் கிசான் அதிரடி – ஆப்பை ரெடியாக்கும் தேர்வுக்குழு href=”https://crictamil.in/ishan-kishan-refuses-to-play-duleep-as-per-reports/”>கோடிகள் கிடைக்கும் போது உள்ளூரில் ஏன் விளையாடனும்? இஷான் கிசான் அதிரடி – ஆப்பை ரெடியாக்கும் தேர்வுக்குழு

அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் பட்சத்தில் அதில் விளையாடும் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் முழுமையாக தயாராக போதிய அவகாசத்தை ஐபிஎல் அணிகளிடமிருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ’யை ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் இந்த ஃபைனலில் முழுமையாக தயாராகாமல் சோர்வுடன் பந்து வீசிய இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது.

Advertisement