கோடிகள் கிடைக்கும் போது உள்ளூரில் ஏன் விளையாடனும்? இஷான் கிசான் அதிரடி – ஆப்பை ரெடியாக்கும் தேர்வுக்குழு

Ishan Kishan Fans
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையின் 2022 சீசன் வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 1961 முதல் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த இந்த தொடரின் தற்போது நடைபெறும் 60வது சீசனுக்கான அணிகளை இந்திய தேர்வு குழு சமீபத்தில் அறிவித்தது. மத்தியம், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வடகிழக்கு என இந்திய நிலப்பரப்பின் 6 அடிப்படை மண்டலங்களை பெயர்களாக கொண்ட 6 அணிகள் இந்த தொடரில் கோப்பைக்காக மோதுகின்றன.

இந்த தொடரில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில அணிகள் அங்கமாக இருக்கும் தெற்கு மண்டலத்திற்கு ஹனுமா விகாரி கேப்டனாகவும் மயங் அகர்வால் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த அணியில் தமிழகம் சார்பில் ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் மற்றும் பிரதோஷ ரஞ்சன் பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்காக தயாராக இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இசான் கிசான் இத்தொடரில் விரும்பவில்லை என்று தேர்வுக் குழுவினரிடம் மறுப்பு தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

கோடிகள் போதும்:
ஜார்கண்ட் மாநிலத்திற்காக 2014இல் விளையாடி வரும் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 2018இல் அறிமுகமாகி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து அசத்திய அவர் 2022 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட நிலையில் கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்தார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதன் பின் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சொதப்பிய நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வானாலும் விளையாடும் வாய்ப்பு பெறாத அவர் சுமாராக செயல்பட்ட விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு பதிலாக அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. இருப்பினும் அதற்கு முன் அவருடைய ஃபார்மை சோதிக்க நினைத்த தேர்வுக்குழு இத்தொடரில் அதுவும் வடகிழக்கு அணியின் கேப்டனாக களமிறக்க விரும்பியதாக தெரிகிறது.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் காயங்கள் எதுவும் சந்திக்காத நிலையில் விளையாட முடியாது என்று இசான் கிசான் மறுப்பு தெரிவித்து விட்டதாக மண்டல தேர்வுக்குழு தொடர்பாளர் டெபாசிஸ் சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி சமீபத்திய பேட்டியில் வடகிழக்கு மண்டல அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணியில் அவர் ஒரு சீனியர் வீரராக இருப்பதால் இந்த துலீப் கோப்பையில் கேப்டனாக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதற்காக சக்ரபோர்த்தி தொடர்ந்து இசான் கிசானுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்”

“ஆனால் தற்போது அணியை தேர்வு செய்வதற்காக இஷான் கிசான் நிலையைப் பற்றி அவரிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு இசான் கிசான் துலீப் கோப்பையில் விளையாட ஆர்வமில்லை என்று சொல்லிவிட்டதாக சக்ரபோர்த்தி கூறினார். அதே சமயம் இஷான் கிசான் காயத்தை சந்தித்துள்ளாரா இல்லையா என்பதை பற்றிய விவரமும் எங்களிடம் சொல்லப்படவில்லை. எனவே அவர் தான் இத்தொடரில் விளையாட விரும்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக சமீப காலங்களாகவே சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் பணத்தால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக வருங்கால கேப்டனாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியா வெள்ளைப்பந்து மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதும் என்று கருதி உள்ளூர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை மொத்தமாக புறக்கணித்து விட்டார்.

இதையும் படிங்க:விராட் ரோஹித்துக்கு டாட்டா, ஜெய்ஸ்வால் ரிங்கு உட்பட – வெ.இ தொடருக்கு ஹர்பஜன் தேர்ந்தெடுத்த 15 பேர் இளம் படை இதோ

அதே போல் தற்போது மும்பைக்காக விளையாடி பல கோடிகளை சம்பாதித்துள்ள இசான் கிசானும் நடந்து கொள்வதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இந்த துலீப் கோப்பையில் விளையாடாமல் போனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட தேர்வு குழுவும் தயாராகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement