விராட் ரோஹித்துக்கு டாட்டா, ஜெய்ஸ்வால் ரிங்கு உட்பட – வெ.இ தொடருக்கு ஹர்பஜன் தேர்ந்தெடுத்த 15 பேர் இளம் படை இதோ

Harbhajan Singh
- Advertisement -

இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விய இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற வீரர்களை சரியாக பயன்படுத்தாமல் டாஸ் அதிர்ஷ்டத்தை கோட்டை விட்ட இந்தியா ஐபிஎல் தொடரில் விளையாடி முழுமையாக தயாராமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

TEam India

- Advertisement -

அதை விட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி புஜாரா ஆகியோரில் யாருமே இந்த ஃபைனலில் அனுபவத்தை காட்டாமல் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானது தோல்வியை கொடுத்தது. முன்னதாக 2014இல் 7வது இடத்தில் தவித்த இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக்கொடுத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக பதவி விலகியதை அனைவரும் அறிவோம்.

ஹர்பஜன் அணி:
அதே சமயம் 5 கோப்பைகளை வென்று கொடுத்தார் என்பதற்காக முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுக் கொடுத்த போதிலும் அழுத்தமான 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அஸ்வின் போன்றவரை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்த அவர் பதவி விலக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

INDia Hardik pandya

சொல்லப்போனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய வீரர்களை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக உலகக்கோப்பைக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போகும் அளவுக்கு சீனியர்கள் அதிக போட்டிகளில் விளையாடிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி போன்றவர்களுக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் ஆதரவளிக்காத அவர் ஹர்திக் பாண்டியா தலைமையில் முற்றிலும் இளம் அணியை தேர்வு செய்துள்ளார். குறிப்பாக ஐபிஎல் 2023 தொடரில் சுமாராக செயல்பட்ட சஞ்சு சாம்சனை கூட தேர்வு செய்யாத அவர் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற அசத்தலாக செயல்பட்ட இளம் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Harbhajan-Singh

“சீனியர் வீரர்கள் ஏற்கனவே அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடி விட்டதால் ஓய்வெடுக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் மேற்கொண்டு தாமதிக்காமல் வெஸ்ட் இண்டீஸ்க்கு இளம் அணியை அனுப்புமாறு நான் நமது வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் புதிய தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:இலங்கை பிரீமியர் லீக் ஏலத்தில் ரெய்னாவின் பெயர் இருந்தும் அழைக்க மறுத்த ஏலாதாரர் – ஏலத்தில் நடந்தது என்ன? – ரசிகர்கள் ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்காக ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்திய அணி பின்வருமாறு:
ஹர்டிக் பாண்டியா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், இசான் கிசான், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, அக்சர் பட்டேல், ஜித்தேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், அர்ஷிதீப் சிங், யுஸ்வென்ற சாஹல், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் மாத்வல்

Advertisement