- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுதான் என்னோட கடைசி தொடர்.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த – விரிதிமான் சஹா

இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருதிமான் சஹா 2010-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி 40 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் மூன்று சதம் மற்றும் ஆறு அரைசதங்களை அடித்துள்ளார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் மிகச் சிறப்பான விக்கெட் கீப்பராக திகழ்ந்து வந்தார்.

ஓய்வை அறிவித்த விரிதிமான் சஹா :

அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஒன்பது போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் பெரிய அளவு அவரால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை.

- Advertisement -

பின்னர் ரிஷப் பண்ட் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறியதால் படிப்படியாக விரிதிமான் சஹா டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது 40 வயதாகும் அவர் தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த வேளையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறார்.’

மேலும் இந்த தொடர்தான் தனது கடைசி தொடர் என்றும் அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்த அவர் தனது கடைசி போட்டியாக 2021-இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் ரஞ்சி தொடரின் முடிவோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அவர் இது குறித்து வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டதாவது : என்னுடைய தேசத்திற்கான இந்த கிரிக்கெட் பயணத்தில் ரஞ்சி டிராபி சீசன் கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஒரு முறை நான் ஆரம்பித்த பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறேன். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

இதையும் படிங்க : இதையும் ஏத்துக்கிட்ட தான் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும்.. தோல்விக்கு பிறகு – ரிஷப் பண்ட் எமோஷனல் பதிவு

இந்த சீசனை எப்போதுமே என் மனதில் வைத்திருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். தோனிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து நல்ல விக்கெட் கீப்பர் என்ற பெயரை எடுத்த அவர் ரிஷப் பண்டின் வருகையால் தனது வாய்ப்பை கடைசி சில ஆண்டுகளாகவே இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -