சச்சின், மெஸ்ஸி மாதிரி வெய்ட் பண்ணா இந்தியாவுக்கு அந்த வெற்றி கூரைய பிச்சிகிட்டு கொட்டும் – ரவி சாஸ்திரி அதிரடி பேட்டி

Shastri-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது. அதன் பின் கடந்த 9 வருடங்களாக அவரது தலைமையில் 3 தொடர்களிலும் விராட் கோலி தலைமையில் 4 தொடர்களிலும் லீக் சுற்றில் அசத்திய இந்தியா பெரும்பாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி ஏமாற்றுத்துடன் வெளியேறியது. அந்த நிலைமை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட ரோகித் சர்மா தலைமையில் மாறும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கொஞ்சம் கூட மாறாமல் மீண்டும் அதே ஏமாற்றமே மிஞ்சியது.

INDia

- Advertisement -

அதனால் சமீப காலங்களாகவே ஐசிசி தொடர்களில் சொதப்பும் லேட்டஸ்ட் சோக்கர் என இந்திய ரசிகர்களே விமர்சிக்கும் அளவுக்கு திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் உலக அளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்தியா 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விடும் இந்தியா ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பாமல் தைரியத்துடன் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அந்த வெற்றி சாத்தியமாகும் என்றே சொல்லலாம்.

வெய்ட் பண்ணுங்க:
இந்நிலையில் லீக் சுற்றை தாண்டுவதற்கே தடுமாறும் பல அணிகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றை தொட்டு வரும் இந்தியா விரைவில் நிறைய உலக கோப்பைகளை வெல்லும் காலம் நெருங்கியுள்ளதாக முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். குறிப்பாக 1992 முதல் 6 முறை காத்திருந்து 2011இல் சச்சின் உலக கோப்பை வென்றது போல் பல வருடங்களாக காத்திருந்து சமீபத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உலகக் கோப்பை வென்றது போல் விளிம்பு வரை சென்று வரும் இந்தியாவுக்கு விரைவில் உலகக் கோப்பைகள் மழை போல் கொட்டும் என அதிரடியாக பேசியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Sachin

“இந்தியாவுக்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக ஃபைனல் மற்றும் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கரை பாருங்கள் அவர் 6 உலகக் கோப்பை விளையாடினார். 6 உலகக் கோப்பை என்றால் 24 வருடங்கள். அவ்வளவு நாட்கள் காத்திருந்து தனது கடைசி முயற்சியில் அவர் உலக கோப்பை வென்றார். அதே போல் லயனல் மெஸ்ஸியை பாருங்கள். அவரும் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாவார். அதாவது அவர் எவ்வளவு நாட்களாக விளையாடுகிறார்? ஆனால் அவர் வெற்றி பெற துவங்கிய போது முதலில் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றார். அதன் பின் உலகக் கோப்பையை வென்று ஃபைனலில் ஸ்கோர் அடித்தார். எனவே அதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். காத்திருந்தால் அது மழை போல் கொட்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அத்துடன் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக புத்துணர்ச்சியுடன் விளையாட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வெடுப்பதற்கு பிசிசிஐ வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அதிக போட்டிகளில் விளையாடும் போது ஓய்வளிப்பதும் அவசியமாகும். அது ஐபிஎல் தொடராக இருந்தாலும் இந்திய வாரியம் ஐபிஎல் அணிகளிடம் “இந்தியாவுக்காக அந்த முக்கிய வீரர்கள் குறிப்பிட்ட சில போட்டிகளில் விளையாடக் கூடாது” என்று நேரடியாக கண்டிப்புடன் கேட்டுக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

shastri 1

இதையும் படிங்க:IPL 2023 : மஜா பா. மஜா பா. தோனியுடன் இணைந்து நடைபோட்ட ரவீந்திர ஜடேஜா – வைரலாகும் வீடியோ

அவர் கூறுவது போல தொடர்ந்து போராடினால் எதுவும் சாதிக்க முடியும் என்ற நிலைமையில் 90% நாக் அவுட் சுற்றை எளிதாக தொடும் இந்தியா நிச்சயமாக விரைவில் உலக கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பலாம். அந்த நம்பிக்கையில் தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement