IPL 2023 : மஜா பா. மஜா பா. தோனியுடன் இணைந்து நடைபோட்ட ரவீந்திர ஜடேஜா – வைரலாகும் வீடியோ

Jadeja-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை முடித்த கையோடு ஜடேஜாவும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு சென்னை அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அணியிலிருந்து வெளியேற இருக்கிறார் என்று ஜடேஜா குறித்து ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன.

இவ்வேளையில் சென்னை அணிக்காக தான் ஜடேஜா விளையாடப் போகிறார் என்று அணி நிர்வாகம் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஜடேஜா சென்னை அணிக்கு திரும்பி பயிற்சி மேற்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு வரனும்னா இதை பண்ணுங்க – சல்மான் பட் யோசனை

அதேபோன்று சென்னை அணியின் நிர்வாகமும் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மஜா பா, மஜா பா என்று ரவீந்திர ஜடேஜா தோனியுடன் நடந்து செல்லும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement