சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு வரனும்னா இதை பண்ணுங்க – சல்மான் பட் யோசனை

Butt
- Advertisement -

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி இந்திய அணியின் வீரர்கள் மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் என்னதான் இந்திய அணி வீரர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் முக்கியமான தொடர்களில் தோல்வியை சந்திக்கும்போது அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு விமர்சனத்தை ஏற்படுத்தும்.

Suryakumar Yadav

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில் பல வீரர்கள் தங்களது பேட்டிங் பார்மை இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக அணியிலிருந்து வெளியேறிய வேளையில் நான்காவது வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடினார்.

அப்படி விளையாடிய சூர்யகுமார் யாதவ் 3 போட்டியிலுமே தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் தனது மோசமான கட்டத்தில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது யோசனைகளை வழங்கி வருகின்றனர்.

Suryakumar-Yadav

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட்டும் சூரியகுமார் யாதவுக்கு தனது ஆலோசனைகளை குறிப்பிட்டு வழங்கி உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : ஒரு வீரர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாமல் போனால் நிச்சயம் அவருக்கு அது கவலையை ஏற்படுத்தும்.

- Advertisement -

ஆனால் இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி இருந்தாலும் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள சறுக்களை நினைத்து அவரை அணியிலிருந்து நீக்கிவிடக்கூடாது. மாற்றாக அவர் ஓய்வு நேரத்தில் இருக்கும்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும். அவ்வாறு அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி நம்பிக்கை பெற்றால் நிச்சயம் மீண்டும் அவருக்கு அது சர்வதேச போட்டிகளின் போது கைகொடுக்கும்.

இதையும் படிங்க : சிக்ஸர் அடிச்சா மண்டையில் பேட்டால் அடிப்பேன்னு சச்சின் திட்டுனாரு – 2004இல் நிகழ்ந்த கலகலப்பான பின்னணியை பகிர்ந்த சேவாக்

எனவே அவருடைய வாய்ப்பை வீணடித்துவிட்டார் என்று அவரை கோபித்துக் கொள்வதை விட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைத்து மீண்டும் அவரை அணியில் இணைத்தால் அது அவரது பார்மை மீட்டு தரும் என சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement