சிக்ஸர் அடிச்சா மண்டையில் பேட்டால் அடிப்பேன்னு சச்சின் திட்டுனாரு – 2004இல் நிகழ்ந்த கலகலப்பான பின்னணியை பகிர்ந்த சேவாக்

Sehwag Sachin
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆரம்பகாலம் முதலே அதிரடியாக விளையாடும் பேட்டிங் ஸ்டைலை பின்பற்றி உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு மிரட்டலான தொடக்கத்தை கொடுக்கும் ஸ்டைலை கொண்டிருந்த அவர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி அலுப்பு தட்டும் டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்களை ஆவலுடன் பார்க்க வைத்தவர்.

அதை விட பொதுவாக 90 ரன்களை தொட்டதும் உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிங்கிள், டபுள் எடுத்து சதத்தை தொடுவார்கள். அதில் நிறைய தருணங்களில் சச்சின் உட்பட நிறைய பேட்ஸ்மேன்கள் பதற்றமடைந்து அவுட்டாகியுள்ள நிலையில் சேவாக் மட்டும் 90, 190, 290 என எந்த வகையான சதமாக இருந்தாலும் அதை பவுண்டரி அல்லது சிக்சரை பறக்க விட்டு தொடுவதில் உலக அளவில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தார். இருப்பினும் அனைத்து நேரங்களிலும் அதே ஸ்டைலால் அவரால் வெற்றியும் காண முடியவில்லை.

- Advertisement -

மண்டையை உடைப்பேன்:
குறிப்பாக 2009ஆம் ஆண்டு ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 293 ரன்களில் இருந்த அவர் அவ்வாறு விளையாட முயற்சித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முச்சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக மகா சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார். இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கிய சேவாக் 195 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானது இறுதியில் கையிலிருந்த இந்தியாவின் வெற்றி பறிபோக வைத்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.

அந்த நிலையில் 2004ஆம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 295 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடித்து 300 ரன்கள் தொடவிருப்பதாக எதிர்புறம் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கரிடம் கூறியதாக சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் மெல்போர்னில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததால் இம்முறை அந்த தவறை மீண்டும் செய்தால் பேட்டால் மண்டையில் அடிப்பேன் என்று சச்சின் தம்மை விளையாட்டாக திட்டியதாக சேவாக் கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அவரது பேச்சைக் கேட்காமல் சிக்ஸர் அடித்து முச்சதம் தொட்ட போது தம்மை விட சச்சின் அதிக மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் சைமன் கேட்டிச் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட நான் 195 ரன்களை எட்டினேன். ஆனால் அடுத்த சிக்சர் அடித்து 200 ரன்களை தொட முயற்சித்த போது நான் அவுட்டானேன். துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம். அதைத்தொடர்ந்து முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 – 7 சிக்ஸர்களை விளாசிய நான் விரைவாக 100 ரன்களை தொட்டேன்”

“அப்போது என்னிடம் வந்த சச்சின் டெண்டுல்கர் “இனிமேலும் நீங்கள் சிக்சர் அடித்தால் நான் உங்களை பேட்டால் அடிப்பேன்” என்று கூறினார். அதற்கு ஏன் என்று அவரிடம் நான் கேட்டேன். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்சர் அடிக்க முயற்சித்து அவுட்டானதால் நாம் தோற்றம் என்பதை அவர் என்னிடம் தெரிவித்தார். அதன் காரணமாக அவரது பேச்சை கேட்ட நான் 120 ரன்கள் முதல் 295 ரன்கள் வரை சிக்ஸர்கள் அடிக்காமலேயே விளையாடினேன். அப்போது மீண்டும் சச்சினிடம் சென்ற நான் “இப்போது சிக்ஸரை பறக்கவிட்டு முச்சதத்தை எட்ட போகிறேன்” என்று சொன்னேன்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் இல்லனா என்ன அவரோட நியாபகமா நாம இதை பண்ணலாம் – ரிக்கி பாண்டிங் யோசனை

“அதற்கு “உங்களுக்கு பைத்தியமா” இந்தியாவுக்காக இதுவரை யாருமே முச்சதம் அடித்ததில்லை என்று சச்சின் மீண்டும் என்னை எச்சரித்தார். அதற்கு இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் 295 ரன்களையும் தொடவில்லையே? என்று அவருக்கு பதிலளித்த நான் சக்லைன் முஷ்டக் பந்தில் இறங்கி வந்து சிக்சர் அடித்து 300 ரன்களை தொட்டேன். அப்போது நிம்மதியடைந்த சச்சின் என்னை விட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்” என்று கூறினார்.

Advertisement