ரிஸ்க் எடுக்காம வெற்றி கிடைக்குமா? பண்ட் – டிகே விவாதத்தில் இந்திய ஜாம்பவான் நியாயமான கருத்து

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஜாம்பவான் தோனிக்கு பின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக அணி நிர்வாகம் வளர்க்க நினைக்கும் ரிஷப் பண்ட் அறிமுகமானது முதல் இதுவரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று சுமாராக செயல்பட்டு வருவதால் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கே நிறைய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

DK and Pant

- Advertisement -

மேலும் அவருக்கு பதில் காலம் காலமாக வாய்ப்புக்காக ஏங்கி வரும் சஞ்சு சாம்சனை ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் என்ன நடந்தாலும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்ற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளது. மறுபுறம் அவருக்கு போட்டியாக தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்தாலும் 37 வயதை கடந்து விட்டதால் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளார்.

ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்ட அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தாலும் தம்மால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியில் அற்புதமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வயதை வெறும் நம்பராக்கி தன்னை மிகசிறந்த பினிஷராக நிரூபித்து வருகிறார்.

Dinesh-Karthik

சான்ஸ் யாருக்கு:
ஆனாலும் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பினிஷிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பளித்து ஒரு இடத்தை வீணாக்கக் கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆசிய கோப்பையில் தோல்வியடைவதற்கு இந்தியா குறைவாக எடுத்த 15 – 20 ரன்களை அடிக்கக்கூடிய தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் தோல்வி கிடைத்திருக்காது என்ற ஆழமான கருத்துகளும் உள்ளது.

- Advertisement -

அதே சமயம் தினேஷ் கார்த்திக் பினிஷிங் மட்டும் தான் செய்வேன் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டேன் என்று எப்போதும் தெரிவித்தது கிடையாது. மறுபுறம் மிடில் ஆர்டரில் அனைவருமே வலதுகை பேட்ஸ்மேன்களாக இருப்பதால் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட்டை கழற்றி விட அணி நிர்வாகமும் தயங்குகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த இருவரையும் ஒன்று சேர விளையாட வைத்தால் ஒரு எக்ஸ்ட்ரா பந்து வீச்சாளர் அல்லது ஆல்-ரவுண்டரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் என்பதால் யாரையாவது ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Gavaskar

கவாஸ்கரின் ரிஸ்க்:
அதன் காரணமாகவே தினேஷ் கார்த்திக்க்கு பதில் ரிஷப் பண்ட் சரியானவர் என்று கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இருவரும் ஒன்றாக விளையாடுவது நன்மை பயக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ரிஸ்க் எடுக்காமல் உங்களுக்கு எப்போதும் வெற்றி கிடைக்காது என்று பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே 11 பேர் அணியில் விளையாடுவதை விரும்புகிறேன். அந்த வகையில் 5வது இடத்தில் ரிஷப் பண்ட் 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடலாம். மேலும் இதன் வாயிலாக ஹர்திக் பாண்டியா தவிர்த்து உங்களுக்கு 4 பந்து வீச்சாளர்களும் கிடைப்பார்கள். இந்த வகையில் நீங்கள் ரிஸ்க் எடுக்காவிட்டால் பின்னர் எப்படி வெற்றி பெற முடியும்? அனைத்து துறைகளிலும் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பாவுக்கு பதில் சிஎஸ்கே தேர்வு செய்யக்கூடிய 5 வீரர்களின் பட்டியல்

அப்போது தான் அதற்கு பரிசாக வெற்றிகள் கிடைக்கும்” என்று கூறினார். இப்படி ஏகப்பட்ட விவாதங்கள் எழுப்பி வரும் இந்த கேள்விக்கான தெளிவு விரைவில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் தெளிவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement