ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பாவுக்கு பதில் சிஎஸ்கே தேர்வு செய்யக்கூடிய 5 வீரர்களின் பட்டியல்

Uthappa-2
Advertisement

இந்திய வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2006இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 2007 டி20 உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றிய அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் 2014இல் ஆரஞ்சு தொப்பியை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்தாலும் அந்த வாய்ப்பை தக்க வைக்கவில்லை. ஆனாலும் வழக்கம்போல ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவரை கடந்த 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. அந்த வருடம் ஆரம்பம் முதல் வாய்ப்பு பெறாமல் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் சுரேஷ் ரெய்னா காயமடைந்ததால் பிளே ஆஃப் மற்றும் பைனல் போன்ற முக்கிய போட்டிகளில் வாய்ப்பை பெற்றார்.

uthappa

அந்த முக்கிய போட்டிகளில் அபாரமாக விளையாடி 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடமும் ஒருசில போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டார். இவரை முதல் முறையாக வாங்கிய போது இவரைப் போய் சென்னை வாங்குகிறதே என்று சென்னை ரசிகர்களே யோசித்தார்கள். ஆனால் நம்பி வாங்கியதற்காக ஏமாற்றாமல் அசத்தலாக செயல்பட்டு தற்போது 36 வயதை தாண்டி விட்டதால் ஓய்வு பெற்றுள்ள உத்தப்பாவுக்கு பதில் வரும் சீசனில் சென்னை நிர்வாகம் தேர்வு செய்யக் கூடிய 5 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. மந்தீப் சிங்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக 108 போட்டிகளில் 1692 ரன்களை எடுத்து வருகிறார். இருப்பினும் இதுவரை பாராட்டும் அளவுக்கு செயல்படாத இவர் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக சுமாராகவே செயல்பட்டதால் விடுவிக்க வாய்ப்புள்ளது.

Mandeep

மறுபுறம் சென்னை நிர்வாகம் எப்போதுமே அனுபவம் வாய்ந்த வீரர்களை யோசிக்காமல் வாங்கக்கூடியது என்பதாலும் தங்களது அணிக்கு வந்தபின் வரலாற்றில் சுமாராக செயல்பட்ட  வீரர்கள் கூட சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்பதை மனதில் வைத்து இவரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

4. மன்னன் வோஹ்ரா: சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இதுவரை 55 போட்டிகளில் 1073 ரன்களை 131.17 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாட தடுமாறுவதாலேயே இன்னும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை எட்ட முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் 29 வயது நிரம்பியுள்ள இவரும் அனுபவமும் திறமையும் பெற்றுள்ளதால் வரும் சீசனில் சென்னை இவரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

Tiwari

3. சௌரப் திவாரி: இடது கை பேட்ஸ்மேனான இவர் ஆரம்ப காலங்களில் இந்தியாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் வீரராக ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறுவதால் ஐபிஎல் அணிகளில் கூட நிலையான இடத்தை பிடிக்க தவறிய இவர் இந்த வருடம் எந்த அணிக்கும் விளையாடவில்லை.

- Advertisement -

32 வயதுடன் 93 போட்டிகளில் 1494 ரன்களை எடுத்து நல்ல அனுபவம் கொண்டுள்ள இவர் தற்போதைய சென்னை அணியில் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமாக இருப்பதால் பேக்-அப் வீரராக வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Karun

2. கருண் நாயர்: கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 76 போட்டிகளில் 1496 ரன்களை 127.75 என்ற ஓரளவு நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை எந்த அணியிலும் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாத இவர் சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் அணிகளில் எப்படியாவது தேர்வாகி விடுகிறார்.

- Advertisement -

அந்த வகையில் வரும் சீசனில் இவரை தங்களது அணிக்கு வாங்கி தோனி தலைமையில் இவரது திறமைகளை பயன்படுத்த சென்னை நிர்வாகம் முயற்சிக்க வாய்ப்புள்ளது.

Manish Pandey

1. மனிஷ் பாண்டே: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் சதமடித்த பேட்ஸ்மேனாக ஒரு காலத்தில் எதிரணிகளை பட்டையை கிளப்பிய இவர் இந்தியாவுக்கும் விளையாடினார். இருப்பினும் நாளடைவில் சுமாராக செயல்படத் துவங்கிய இவர் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ஆனாலும் இப்போதும் கோடிக்கணக்கில் ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டு வரும் இவர் இந்த வருடம் லக்னோ அணிக்காக 4.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அங்கு சுமாராக செயல்பட்டதால் அந்த அணி விடுவிக்கப் போகும் இவர் 160 போட்டிகளில் 3648 ரன்களை எடுத்து நல்ல அனுபவம் கொண்டுள்ளதால் வரும் சீசனில் சென்னை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement