
இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று முள்ளான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று துவங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியானது முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இவ்வேளையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் டாஸ் வென்ற பிறகு இந்திய அணியை அறிவித்த கேப்டன் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் விளையாடுகிறார் என்று அறிவித்தார்.
அவரை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடாததால் 15 ஆண்டு காலத்திற்கு இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு அரிதான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியில் இணைந்ததும் நான் சிறப்பாக விளையாட காரணம் இதுதான் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி
அதாவது கடந்த 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி விளையாடியுள்ள 67 டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இல்லாமல் இந்திய அணி விளையாடியது கிடையாது. இவ்வேளையில் 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா இல்லாமல் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய அணி விளையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.