ஆர்.சி.பி அணியில் இணைந்ததும் நான் சிறப்பாக விளையாட காரணம் இதுதான் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

Venkatesh Iyer
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்படி கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய வெங்கடேஷ் ஐயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 7 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. முன்னர் கொல்கத்தா அணியில் பெரிய தொகைக்கு அவர் விளையாடியிருந்த போது அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிவரவில்லை.

ஆர்.சி.பி அணியில் விளையாடியது குறித்து : வெங்கடேஷ் ஐயர் பேட்டி

இதன் காரணமாக கடுமையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் வெங்கடேஷ் ஐயர் சந்தித்திருந்தார். அதன் பின்னர் 2026 ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் அவரை ஏழு கோடி ரூபாய்க்கு ஆர்.சி.பி அணி வாங்கியதும் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் பிற்பாதியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தன் மீது இருந்த விமர்சனங்கள் குறித்து பேசிய அவர் கூறுகையில் : சமூக ஊடக விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். ஏனெனில் விமர்சனங்கள் அனைவரையுமே பாதிக்கும்.

ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய செயல்பாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே கடினம் உழைப்பு மற்றும் சிறப்பான செயல்பாடு காரணமாக என்னுடைய திறனை மீண்டும் நிரூபித்துள்ளேன். நான் நன்றாக விளையாடினாலும் மக்கள் பேசுவார்கள். நன்றாக விளையாடவில்லை என்றாலும் மக்கள் பேசுவார்கள் எனவே நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 3 ஆவது வீரராக இவரே விளையாடுவார் – கம்பீர் உறுதி

அதேபோன்று ஆர்.சி.பி அணியில் இணைந்ததும் நான் சிறப்பாக விளையாட காரணம் யாதெனில் : ஆர்.சி.பி அணியில் ஒருபோதும் நான் தனிமையாக உணரவில்லை. எனது சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஆர்.சி.பி அமைத்துக் கொடுத்தது. அதன் காரணமாகவே என்னால் முன்னோக்கி செல்ல முடிந்தது என்றும் வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement