
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜூன் 26 ஆம் தேதி நேற்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டக்கர் 50 ரன்களையும், டெலானி 49 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
அதனை தொடர்ந்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அயர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இந்த தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும். இதுவரை சர்வதேச போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்காத இந்திய அணி தற்போது முதல் முறையாக தோல்வியை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : இதுக்கு வைபவ் சூர்யவன்ஷியே விளையாடி இருக்கலாம் போலயே.. சஞ்சு சாம்சன் சொதப்பலால் – நெட்டிசன்கள் கிண்டல்
அதேவேளையில் இந்திய அணியை எதிர்த்து பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் தங்களது முதலாவது வரலாற்று வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டிலிருந்து எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வந்த இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய மட்டுமே வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.