- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த வரலாற்று வெற்றிக்கு காரணம் இதுதான் – அயர்லாந்து கேப்டன் மகிழ்ச்சி

அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அயர்லாந்து அணி 34 எண்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.

இந்திய அணியை வீழ்த்தியதற்கு பிறகு பேசிய : அயர்லாந்து கேப்டன்

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவிக்க பின்னர் அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 148 ரன்களில் சுருண்டதால் 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக ஒரு வெற்றியை சர்வதேச போட்டிகளில் பதிவு செய்து வரலாற்று சாதனை நிகழ்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய அயர்லாந்து அணியின் கேப்டன் டக்கர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக கிடைத்த இந்த வெற்றிக்கு அணியில் உள்ள ஒவ்வொருவருமே காரணம்.

இந்த போட்டியில் நாங்கள் கடினமான சூழ்நிலையை சந்தித்தாலும் சரியான முறையில் மீண்டு வந்து இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதாக நினைக்கிறேன். குறிப்பாக பேட்டிங்கில் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின்னர் மிகச் சிறப்பாக விளையாடிய 180 ரன்கள் வரை சென்றதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : நமது அணியின் வீரர்களுக்கு நான் சொல்லும் மெசேஜ் இதுதான்.. தோல்விக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு

அதேபோன்று பந்து வீச்சிலும் சரியான நேரத்தில் இந்திய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளோம். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த வெற்றியில் அனைவருக்குமே பங்கு உண்டு என அயர்லாந்து கேப்டன் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -