
அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து முதல் முறையாக அயர்லாந்து அணியிடம் வீழ்ந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு சுருண்டதால் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இவ்வேளையில் இந்தப் போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது :
இந்த போட்டியின் ஆரம்பத்தில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததால் நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் பிற்பாதியில் அயர்லாந்து வீரர்கள் ரன்களை குவித்துவிட்டனர். இந்த போட்டியில் அயர்லாந்து அணியின் துவக்கத்தை பார்த்ததும் 140 ரன்கள் அடித்தாலே நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் அதையும் தாண்டி ரன் குவித்து விட்டனர். இந்த போட்டியில் ஷிவம் துபே சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
அவருடன் நான் மும்பை அணியில் உள்ளூர் போட்டியில் விளையாடியுள்ளதால் அவருடைய ஸ்ட்ரென்த் எனக்கு தெரியும். அதேபோன்று காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்ஷித் ராணாவும் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு நான் எங்களது அணியின் வீரர்களிடம் சொல்லும் விடயம் ஒன்றுதான். அதாவது எந்த ஒரு போட்டியையும் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது.
இதையும் படிங்க : டி20 சாம்பியன் இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்.. முதல் போட்டியிலேயே இப்படியா? – வரலாறு படைத்த அயர்லாந்து
சரியான வகையில் விளையாடி வெற்றிகளை பெற வேண்டும். நாம் ஒவ்வொரு போட்டியிலுமே கடின உழைப்பை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை ருசிக்க முடியும். எனவே எந்த ஒரு போட்டியையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் முழு பங்களிப்பையும் வீரர்கள் வழங்க வேண்டும். எதிரணி நமக்கு ஒரு சிறிய வாய்ப்பை கொடுத்தால் கூட அவர்களை வீழ்த்தி விட வேண்டும் என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.